பிளஸ் 2 செய்முறைதேர்வு துவங்கியது


தமிழகம் முழுவதும், பிளஸ் 2 செய்முறைத் தேர்வு, நேற்று துவங்கியது. பிரதான எழுத்து தேர்வுக்கு முன்னதாக, அறிவியல், கணக்குப்பதிவியல் உள்ளிட்ட பிரிவுகளைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு, நேற்று
செய்முறைத் தேர்வு துவங்கியது. மாவட்டங்களில் உள்ள மாணவ, மாணவியரின் எண்ணிக்கைக்கு ஏற்ப, இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக, செய்முறைத் தேர்வுகள் நடக்கின்றன. இம்மாதம், 18ம் தேதி வரை, இந்த தேர்வுகள் நடக்கின்றன.
ஒவ்வொரு தேர்வும், 50 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. மீதமுள்ள, 150 மதிப்பெண்களுக்கு, எழுத்து தேர்வு நடக்கும். சென்னை மாவட்டத்தில், இரு கட்டங்களாக நடக்கும் செய்முறைத் தேர்வில், 30 ஆயிரம் மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். 300 மையங்களில், இந்த தேர்வுகள் நடக்கின்றன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...