பிளஸ் 2 பொதுத்தேர்வு; அதிகாரிகள் "சுறுசுறு'

:பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்த நடவடிக்கைகளில், கல்வித்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.மார்ச் 1 முதல் 27 வரை, பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடக்கிறது. 9,964 மாணவர்கள், 12,046
மாணவியர் தேர்வு எழுதுகின்றனர்; தனித்தேர்வர்கள் 960 பேர் பங்கேற்கின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் ஏழு இடங்களில், வினாத்தாள் கட்டு காப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு இன்னும் மூன்று தினங்களே உள்ளதால், தேர்வுக்கான ஏற்பாடுகளில் கல்வித்துறை அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தேர்வு நடக்கும் மையங்கள், தேர்வு அறைகளின் எண்ணிக்கை, மாணவர்களின் எண்ணிக்கை, கழிப்பிடங்கள் மற்றும் குடிநீர் வசதி குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். பள்ளிகளில் அனைத்து இடங்களிலும் துண்டு காகிதங்கள் எதுவுமின்றி, சுத்தப்படுத்தவும், பயன்பாடு இல்லாத வகுப்பறைகளை பூட்டி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிக்குள் அன்னிய நபர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது; ஒவ்வொரு மையத்திலும் துப்பாக்கி ஏந்திய போலீசார், பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர்.
தேர்வு பணியில் ஈடுபடும் முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் கூடுதல் கண்காணிப்பாளர்களுக்கு, லிட்டில் பிளவர் பள்ளியில், முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அப்போது, தேர்வு பணி நியமன உத்தரவு தரப்படும். தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கான எழுது உபகரணங்கள், நஞ்சப்பா பள்ளியில் வழங்கப்பட்டு வருகின்றன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...