ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் : புதுவை முன்னாள் அமைச்சருக்கு 4 ஆண்டு சிறை


புதுவை முன்னாள் அமைச்சர் கல்யாண சுந்தரம் மீதான 10ம் வகுப்பு தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் திண்டிவனம் முதலாவது குற்றவியல் நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனை அளித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தனியார்
பள்ளியில் 10ம் வகுப்பு பொது தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்தது. 29,09,2011ல் நடந்த அறிவியல் தேர்வில் ஆள்மாறாட்டம்  செய்து தேர்வு எழுதியதாக புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அவருக்கு உடந்தையாக இருந்ததாக தேர்வு அறை கண்காணிப்பாளர் ஆதவன், திண்டிவனம் கல்வி மாவட்ட அலுவலக உதவியாளர் ரஜினிகாந்த் ஆகியோர் மீது அப்போதையை முதன்மை கல்வி அலுவலர் குப்புசாமி புகார் செய்தார்.

அதன் பேரில் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார்  வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக, திண்டிவனம் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.  இதன் தொடர்ச்சியாக, கல்யாணசுந்தரத்தின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. ஆசிரியர் ஆதவன், உதவியாளர் ரஜினிகாந்த் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதுவரை இந்த வழக்கில் 56  சாட்சியங்களிடம் விசாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. இதில் புதுவை முன்னாள் அமைச்சர் கல்யாண சுந்தரத்திற்கு 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. அவருக்கு உடந்தையாக இருந்ததாக தேர்வு அறை கண்காணிப்பாளர் ஆதவனுக்கும் மற்றும் கல்வி மாவட்ட அலுவலக உதவியாளர் ரஜினிகாந்துக்கும் 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...