மின் கட்டணம் செலுத்தாததால் 44 பள்ளிகளில் மின்இணைப்பு துண்டிப்பு


மின் கட்டணம் கட்டாத பள்ளிகளின் மின்இணைப்பை மின்வாரியம் துண்டித்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட டிவி கம்யூட்டர்கள் பயன்பாடின்றி உள்ளன. தமிழகத்தில் நகராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் சுமார் 34,871 தொடக்கப் பள்ளிகள், 9,969 ஒன்றிய
நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக மின் இணைப்பு பெறப்பட்டுள்ளது. மின் கட்டணம் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலக தொகுப்பு நிதியிலிருந்து செலுத்தப் பட்டு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததால், ஒன்றிய மற்றும் நகராட்சி அலுவலகத்திலிருந்து மின் கட்டணம் செலுத்துவது நிறுத்தப்பட்டது. இதனால் மின் கட்டணத்தை தலைமையாசிரியர்கள் சொந்த பணத்தில் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது.மின் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்தது. இதையடுத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் மூலம் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு மின்கட்டணம் செ லுத்த தமிழக அரசு உத்தரவிட்டது. அதற்கான நிதி யை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்திற்கு அரசு ஒதுக்கி வந்தது. இந்நிலையில் திடீரென மின்கட்டண நிதியை தமிழக அரசு குறைத்து ஒதுக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் மின் கட்டணம் செலுத்த முடியவில்லை.

 இந்நிலையில்  ஆண்டு கணக்கில் மின் கட்டணம் செலுத்தாத பள்ளிகளின் மின் இணைப்பை மின்வாரிய அதிகாரிகள் துண்டித்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், கல்லல் ஒன்றியத்தில் மட்டும் சுமார் 44 பள்ளிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், பள் ளி வகுப்பறைகளில் உள்ள மின்விசிறிகள், லைட்டுகள் இயங்கவில்லை. அனை வருக்கும் கல்வி இயக்கம் மூலம் வழங்கப்பட்ட டிவி மற்றும் டிவிடி பிளேயர்கள் பயன்படுத்தாமல் மூலையில் போடப்பட்டுள்ளன. அதேபோல் கம்யூட்டர்களும் பயன்பாடின்றி கிடக்கிறது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஒதுக்கீடு குறைந்ததால், எங்களால் அனைத்து பள்ளிகளுக்கும் மின் கட்டணம் செலுத்த முடியவில்லை. பள்ளிகளின் மின் இணைப்பை துண்டிக்க கூடாது என அரசு உத்தரவு உள்ளது. ஆனால் துண்டித்து வருகின்றனர். தற்போது கூடுதல் நிதி பெறப்பட்டுள்ளது. விரைவில் மின் கட்டணம் செலுத்தப்படும்‘ என்றார். மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஆண்டுக்கணக்கில் மின் கட்டணம் செலுத்தாத பள்ளிகளின் மின் இணைப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டே துண்டிக்கப்படுகிறது. இதேபோல் கட்டணம் செலுத்தாத அரசு அலுவலகங்களிலும் மின் இணைப்பையும் துண்டித்து வருகிறோம்‘ என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...