தொல்லியல் கண்டுபிடிப்புகளை வெளியிட புதிய இணையதளம்

தமிழக தொல்லியல் வரலாற்றை, பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், புதிய இணையதளம் உருவாக உள்ளது. இதில், தொல்லியல் துறை கண்டுபிடிப்புகள், துறை வெளியீடுகள், அரிய புகைப்படங்கள் உள்ளிட்டவை பதிவு செய்யப்பட உள்ளன. தமிழகத்தில், பண்டைய வரலாற்று சின்னங்களை பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல்,
தொல்லியல்
முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில், முறையான அகழாய்வு பணிகளை, தொல்லியல் துறை மேற்கொண்டு வருகிறது.
தொல்லியல் துறை பணிகளாக, தமிழகத்தில், 25 மாவட்டங்களில் உள்ள, 23 ஆயிரத்து 940 கல்வெட்டுகள் புகைப்படங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன. தொல்லியல் துறையால் கண்டுபிடிக்கப்பட்ட, நன்னிலம், திருவீழிமிழலை என, 27 கல்வெட்டு தொகுப்புகள், நூலாக பதிப்பித்தும் வெளியிடப்பட்டுள்ளன. தஞ்சாவூர் அரண்மனை, மதுரை மகால், பூம்புகார், கொற்கை, வாசவ சமுத்திரம், பண்டைய காசுகள், திருகோவிலூர், தரங்கம்பாடி உள்ளிட்ட, 1960ல் எடுக்கப்பட்ட, 5,000க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. நாகப்பட்டினம் தரங்கம்பாடி, காஞ்சிபுரம் ஆலம்பரை உள்ளிட்ட, 33 இடங்களில் நடந்த, அகழாய்வு பணிகள் நூலாக வெளியிடப்பட்டுள்ளன. தொல்லியல் சின்னங்கள் குறித்த அகழாய்வு அறிக்கைகள், மாவட்ட தொல்லியல் வழிகாட்டி புத்தகங்கள், கோவில் ஆய்வேடுகள் உள்ளிட்டவையும், நூலாக வெளியிடப்பட்டுள்ளன. இதுவரை, தொல்லியல் துறை சார்பில், 252 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. கல்வெட்டு காலாண்டு
இதழும் வெளியிடப்பட்டு வருகின்றன. பழமையான கலை பொருள்கள், இந்தியாவிலிருந்து கடத்தப்படுவதை தடுக்கும் வகையிலும், 1972ம் ஆண்டின், பழம்பொருள் பாதுகாப்பு சட்டத்தில், 40 ஆயிரத்தும் மேற்பட்ட கலை பொருள்கள் பதிவு
செய்யப்பட்டுள்ளன. தொல்லியல் துறை சார்பில் நடந்து வரும் அனைத்து பணிகளையும், பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், தீதீதீ.tணச்ணூஞிட.ணிணூஞ்.டிண புதிய இணையதளம் உருவாக உள்ளது. இரு மாதங்களில் இந்த இணையதளம் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இதில், தொல்லியல் கண்டுபிடிப்புகள், கலை பொருள்கள் பதிவு, துறை வெளியீடுகள், இதழ்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவை பதிவு செய்யப்பட உள்ளன.

இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழக தொல்லியல் வரலாற்றை, பொதுமக்கள் தெரிந்து கொள்ள, இந்த இணையதளம் பெரும் உதவி இருக்கும். தொல்லியல் நடவடிக்கைகள் அனைத்தும், உடனுக்கு உடன் இதில் பதிவு செய்யப்படும். வெளிநாட்டில் உள்ள தொல்லியல் ஆய்வாளர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் தமிழக தொல்லியல் தகவல்களை, அங்கிருந்தபடியே, இணையதளம் மூலம் எளிதில் பெற முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...