அரசின் புதிய விதிமுறைபடி பள்ளி வாகனங்களில் ஆய்வு

அரசின் புதிய விதி முறைகளின்படி, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, பள்ளி வாகனங்களை ஆய்வு நடக்க உள்ள நிலையில், ஒருங்கிணைப்பு குழுவால் முதல் கட்ட ஆய்வு நடத்தப்பட்டது. பள்ளி வாகனங்களை விபத்தில்லாமல் பாதுகாப்புடன் இயக்கிட, 2012 செப்., முதல் புதிய விதி
முறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் படி, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அதிகாரிகள் அடங்கிய ஒருங்கிணைப்பு குழு, பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும். இதில் உள்ள குறைபாடுகளை 15 தினங்களுக்குள் நிவர்த்தி செய்து, வட்டார போக்குவரத்து அலுவலர் முன், மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கண்டக்டர் உரிமம் பெற்றவர்கள், டிரைவர் கேபின் தனிமைப்படுத்துதல், வேகக் கட்டுப்பாட்டு கருவி, அவசர வழி, ஜன்னல்களில் இரும்பு வலை என்பது உட்பட புதிய விதி முறைகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஒருங்கிணைப்பு குழுவால், தற்போது முதல் கட்ட ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் கலெக்டர் ஹரிஹரன் தலைமையில், கலால் வரித்துறை உதவி கமிஷனர் பூபதி போலீஸ் டி.எஸ்.பி.,ராமமூர்த்தி, வட்டார போக்குவரத்து அலுவலர் கருப்பசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர் பாஸ்கரன், முதன்மை கல்வி அலுவலர் பகவதி, உள்ளிட்டோர் கொண்ட குழு, விருதுநகர், சாத்தூர் பகுதியில் உள்ள வாகனங்களை, நோபிள் மெட்ரிக்., பள்ளியில் ஆய்வு செய்தன. 147 வாகனங்களில், 45 வாகனங்கள் மட்டுமே முழுமையாக விதி முறைகள் பின்பற்றப்பட்டிருந்தன. 102 வாகனங்களுக்கு சிறு குறைபாடுகள் இருந்ததால்,அதை நிவர்த்தி செய்ய ,15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலர் கருப்பசாமி,"" பள்ளி வாகனங்கள் விபத்தின்றி இயக்க, ஒருங்கிணைப்பு குழு ஆய்வு நடத்தியது. குறைபாடு வாகனங்களுக்கு 15 நாள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் போக்குவரத்து குழு அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேதி குறிப்பிடாமல் ஆய்வு நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது,''என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...