இக்னோ பல்கலையில் "ஆன்லைன்' மூலம் இலவசப் பாடத் திட்டங்கள்

""இக்னோ பல்கலையில் "இ-ஞான்கோஸ்' கல்வி இணையதளத்தின் மூலம் 2000கும் மேற்பட்ட பாட விளக்கங்களின் வீடியோ தொகுப்பை, "ஆன்லைன்' மூலம் இலவசமாக படிக்கலாம்,'' என, பல்கலை மண்டல இயக்குனர் மோகனன் தெரிவித்தார்.பல்கலை பேராசிரியர்கள்,
பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வில் அவர் பேசியதாவது:பல்கலையில் 530 பாடத்திட்டங்கள், மதுரை மண்டலத்தில் 120 பாடத்திட்டங்கள் உள்ளன. முதன்முதலாக இணையதளத்தின் மூலம் 2000க்கும் மேற்பட்ட பாடத்திட்டங்கள், கருத்தரங்க தகவல்களை வெளியிட்டுள்ளோம். "ஆன்லைன்' மூலம் மாணவர்கள் இலவசமாக படிக்கலாம். அடுத்த மாதத்தில் "ஞான் வாணி' பண்பலை, மதுரை மண்டலத்தில் துவங்க உள்ளது. இதில் "டோல் ப்ரீ' எண் மூலம், மாணவர்கள், நிபுணர்களுடன் இலவசமாக கலந்துரையாடலாம். சென்னையில் ஹீரோ நிறுவனத்தின் மூலம் "மோட்டார் ரிப்பேரிங்' குறித்த சான்றிதழ் பயிற்சியில், 100 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் 20 பேர் டீலர்களாக உள்ளனர். படிக்காதவர்களையும், இம்மையத்தில் சேர்க்கும் வகையில், நிறைய சான்றிதழ் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறோம். மதுரை மண்டலத்தில் விரைவில் "மோட்டார் ரிப்பேரிங்' பயிற்சி துவக்கப்படும். விவசாயம், நீர் மேலாண்மை தொடர்பான சான்றிதழ் வகுப்புகளும் நடத்தப்பட உள்ளன, என்றார்.பயிற்சி கையேட்டை, மதுரை காமராஜ் பல்கலை டீன் ராஜ்யகொடி வெளியிட்டார். மண்டல துணை இயக்குனர் கிஷோர் குமார், உதவி இயக்குனர் நம்பூதிரிபாட், உதவி பதிவாளர் விஜயகுமார் பங்கேற்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...