கடும் மின்வெட்டால் ஆன்லைன் நிதிசார் கல்வியறிவு தேர்வு வினாத்தாளுக்கு மாற்றம்


தமிழகத்தில் நிலவும் கடும் மின்வெட்டு காரணமாக ஆன்லைனில் நடத்தப்பட்ட நிதிசார் கல்வியறிவுத் திட்டத்தேர்வை வினாத்தாள் மூலம் நடத்த பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. மாணவர்கள் வணிகம்
மற்றும் பொருளாதார செய்திகளை தெரிந்து கொள்வதற்காக அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் நிதிசார் கல்வியறிவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதனை பள்ளி கல்வித்துறை, தேசிய பங்கு சந்தை நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது. முதல் கட்டமாக 2010,11ம் ஆண்டில் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. தொடர்ந்து 2011,12ம் ஆண்டு முதல் 9 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக் கும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக நிதிசார் கல்வியறிவு தொடர்பான பாடப்புத்தகங்கள் பள்ளிகளுக்கு தனியாக அனுப்பப்படுகின்றன. அப்பாடங்களை வணிகவியல் ஆசிரியர்கள் நடத்துகின்றனர்.

இந்த ஆண்டு நிதிசார் கல்வியறிவுத் தேர்வு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடக்க உள்ளது. இத்தேர்வு கடந்த ஆண்டு வரை ஆன்லைனில் நடத்தப்பட்டது. ஆன்லைன் தேர்வுக்கு இன்டர்நெட் வசதியுடன் கூடிய கம்யூட்டர்கள் தேவைப்ப டும். ஆனால், தமிழகம் முழுவதும் தற்போது கடும் மின்வெட்டு நிலவி வருவதால் ஆன்லைனில் தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நிதிசார் கல்வியறிவு தேர்வுகளை வினாத்தாள்கள் மூலம் நடத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

வகுப்புகளுக்கு தகுந்தாற்போல் வினாத்தாள் களை தயாரித்து, கோடிங் சீட்டுடன் சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்க தேசிய பங்குச் சந்தை நிறுவனத்திடம் பள்ளி கல்வித்துறை கேட்டு கொண்டுள் ளது. இதுவரை ஆன் லைனில் நடத்தப்பட்ட நிதிசார் கல்வியறிவுத் திட்ட தேர்வுகள் கடும் மின்வெட்டால் வினாத்தாள் மூலம் நடத்தப்பட உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...