"சாரல் - அல்டிகா' சேட்டிலைட் விண்ணில் செலுத்த தயார்

இந்தியா - பிரான்ஸ் நாடுகளின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்டுள்ள, "சாரல் - அல்டிகா' செயற்கை கோள், விண்ணில் செலுத்த தயார் நிலையில் உள்ளது.
கடல் அலை, நீர்மட்டம் மற்றும் சுற்றுப்புற சூழ்நிலை குறித்து, ஆய்வு
செய்வதற்காக, இரு நாடுகளும் இணைந்து, செயற்கை கோள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. "இஸ்ரோ" மற்றும், பிரான்சின் சி.என்.இ.எஸ்., விண்வெளி நிறுவனங்கள் முயற்சியால், 450 கிலோவில், "சாரல் - அல்டிகா' செயற்கை கோள் தயாரிக்கப்பட்டது.கடந்த டிசம்பரில் விண்ணில் செலுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மேலும் சில சோதனைகள் செய்ய வேண்டியிருந்ததால், முயற்சி தள்ளிவைக்கப்பட்டது. இப்போது, அனைத்து சோதனைகளும் பூர்த்தியாகி, செயற்கை கோள், விண்ணில் செலுத்த தயார் நிலையில் உள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, 22 மற்றும், 25ம் தேதிகளுக்கு இடைபட்ட நாட்களில், பி.எஸ்.எல்.வி., ராக்கெட் மூலம், விண்வெளிக்கு ஏவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வாரம், பிரான்ஸ் அதிபர், பிரான்கோய்ஸ் ஹாலந்தே, இந்தியா வரவுள்ளார். அவரது வருகைக்கு பின், "சாரல் - அல்டிகா' விண்ணில் செலுத்தப்படலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...