பெரியார் பல்கலை தேர்வு துறையில் தொடரும் குளறுபடி: மாணவ, மாணவியர் கடும் அவதி


சேலம், பெரியார் பல்கலை தேர்வுத் துறையின் குளறுபடியால், கல்லூரி செமஸ்டர் தேர்வு முடிவு வெளியிடுவது மற்றும் தொலைநிலைக்கல்வி தேர்வு நடத்துவதில் தாமதம் ஏற்படுவதால், மாணவ, மாணவியர் கடும்
அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

சேலம் பெரியார் பல்கலையில், 80க்கும் மேற்பட்ட இணைவு பெற்ற கல்லூரிகள், 250க்கும் மேற்பட்ட தொலைநிலைக்கல்வி படிப்பு மையங்கள் உள்ளன. இவற்றில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். கல்லூரி மாணவ, மாணவியருக்கு, நவம்பர் மற்றும் ஏப்ரல் மாதம், தொலைநிலைக்கல்வி மையங்களுக்கு டிசம்பர் மற்றும் மே மாதங்களில், செமஸ்டர் தேர்வு நடத்தப்படுவது வழக்கம்.நடப்பு கல்வியாண்டு, நவம்பர் மாதம் நடந்த, செமஸ்டர் தேர்வு முடிவு, இதுவரை, வெளியிடப்படவில்லை. இதில், முதுகலை மாணவர்களுக்கான, விடைத்தாள்கள் இன்னும் மதிப்பீடு செய்யப்படவில்லை. ரெகுலர் மாணவர்களுக்கு, இந்த நிலைமை என்றால், தொலைநிலைக் கல்வியில் படிக்கும் மாணவர்களுக்கோ, பல குழப்பங்கள், குளறுபடிகள் நடந்து வருகின்றன.

ஏமாற்றம் மிஞ்சும்:டிசம்பர் மாதத்தில் நடத்த வேண்டிய செமஸ்டர் தேர்வு, இதுவரை நடத்தப்படவில்லை. கடந்த ஜூன் மாதத்தில், தேர்வெழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள், முழுமையாக வழங்கப்படவில்லை.இதனால், தேர்வுக் கட்டணம், கல்விக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் கட்டிவிட்டு, காத்திருக்கும் மாணவர்களுக்கு, ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.தொலைநிலைக் கல்வி படிப்பு மைய ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:தொலைநிலைக் கல்வி மூலம் தேர்வெழுதும் மாணவர்களுக்கு, முழுமையான தேர்வு முடிவுகள்

வழங்கப்பட்டதில்லை. உதாரணத்துக்கு, 10 ஆயிரம் மாணவர்கள், 40 ஆயிரம் தேர்வுத் தாள்கள் எழுதினர் என்றால், அதில், 10 ஆயிரம் தேர்வுத் தாள்களின், முடிவு கூட வெளியிடப்படுவதில்லை.அதிலும், இந்த தேர்வு முடிவு வெளியிட்டு, ஓரிரு நாட்களுக்குள், அடுத்த தேர்வின் அறிவிப்பும் வந்துவிடும் என்பதால், பல நிலுவை தேர்வு முடிவுகளை பெற முடியாமலேயே, அதே பாடத்துக்கு, மீண்டும் கட்டணம் செலுத்தி, மீண்டும் தேர்வு எழுதும் கட்டாயத்துக்கு, மாணவர்கள் தள்ளப்படுகின்றனர்.

மாணவர்கள் விரக்திநிலுவைத் தாள்களுக்கான தேர்வு முடிவுகளை, எத்தனை முறை பல்கலையில் போராடினாலும், பெற முடிவதில்லை. இதனால், பெரியார் பல்கலை தொலைநிலைக் கல்வியில் சேர்ந்த மாணவ, மாணவியர், விரக்தியில் உள்ளனர். சரியான சமயத்தில் தேர்வு நடந்தாலே, தேர்வு முடிவுகளை தாமதமாகவே வழங்குவர். தற்போது இரண்டு மாத தாமதம் ஏற்பட்டும், தேர்வு நடைபெறவில்லை.தேர்வு நடத்துவது தான் இப்படி என்றால், சான்றிதழ்களை வாங்குவதிலும், மிகப் பெரிய போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கட்டணம் மட்டுமின்றி, பலரையும், "கவனித்தால்' மட்டுமே சான்றிதழ்களை பெற முடிகிறது.இந்த நிலை பல ஆண்டுகளாக இருந்தும், இதுவரை சரி செய்யப்படாமல் இருப்பது வேதனையை அளிக்கிறது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில், இன்னும் ஓரிரு ஆண்டுகளில், பெரியார் தொலை நிலைக் கல்வியில் சேர, மாணவர்கள் யாரும் முன் வரமாட்டார்கள் என்பது நிச்சயம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...