ஏரிகளை காக்கும் தொண்டர்களாக பள்ளி மாணவ, மாணவியர்


தாராள மயமாக்கம், உலகமயமாக்கத்தின் மோசமான விளைவுகளில் ஒன்று, நீர் நிலைகளைபுறக்கணித்து அவற்றை கொஞ்சம் கொஞ்Œமாக அழிப்பது.உணவு, குடிநீர், தங்குமிடம், கல்வி, மருத்துவம் ஆகியவற்றை,
காசுக்கு விற்க கூடாது என்பது இந்த மண்ணின் மரபு.

ஆனால், இன்றுஅதிகளவில், வருமானம் தரும்விஷயங்களாக இவை மாறி விட்டன. குடிநீருக்கு நகரங்களில்ஏற்பட்டுள்ள பற்றாக்குறை, எவ்வளவு பணம் கொடுத்தாலும், சுத்தமான குடிநீர் நகரங்களில் கிடைக்காத அவலம், ஆகிய சூழல்கள், நீர் நிலைகளை காக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றன.இந்நிலையில், அடுத்த தலைமுறைகளுக்காவது, நீர்நிலைகளின் அவசியம் தெரிய வேண்டும்; அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், களம் இறங்கி உள்ளது, "என்விரோன்மென்டலிஸ்ட் பவுண்டேஷன் ஆப் இந்தியா' என்ற, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அமைப்பு.

சுற்றுச்சூழல் மீது ஆர்வம்பள்ளி மாணவர்களை தன்னார்வ தொண்டர்களாக கொண்டு, சென்னை உட்பட, பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில், தூர் வாருதல் உள்ளிட்ட பணிகளை செய்து வரும் இந்தஅமைப்பின் தலைவர், அருண் கிருஷ்ணமூர்த்தி, 25, கூறியதாவது:ஆந்திர மாநிலம் பூர்வீகம். நான் பிறந்து வளர்ந்தது தமிழகத்தில் தான். சிறுவயதில் இருந்தே, வன உயிரினங்கள் மீதும், சுற்றுச்சூழல் மீதும் மிகுந்த ஆர்வம் உண்டு.என் பள்ளி பருவத்தின் போது, தாம்பரத்தை அடுத்த முடிச்சூரில் குடி இருந்தோம். அப்போது அந்த பகுதி, எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என, ரம்மியமான இடமாக இருந்தது. தற்போது அப்படி இல்லை.

கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, ஐதராபாத்திற்கு பணிக்கு சென்றேன். அங்கு, மியாபூரில் உள்ள குருநாதம் என்ற ஏரி, குப்பையால்மிகவும் சீரழிந்து கிடந்தது.பள்ளி மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன உதவியுடன், ஏரியை சுத்தம் செய்தோம். அப்போது உருவாக்கப்பட்டது தான், இந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அமைப்பு. அதன் பின், பணி நிமித்தமாக எங்கு சென்றாலும், அங்கு அமைப்பின் கிளையை துவங்கினேன்.இவ்வாறு அவர் கூறினார்.

17 ஏரிகள்:தற்போது சென்னை, ஐதராபாத், டில்லி, லக்னோ, ஆமதாபாத், பெங்களூரு, விசாகப்பட்டினம், கோவை, புதுச்சேரி ஆகிய இடங்க ளில் அவரது அமைப்பின் தன்னார்வ தொண்டர்கள் உள்ளனர்.வன உயிரினங்கள் பாதுகாப்பு, நீர்நிலைகள் பாதுகாப்பு, பசுமை கிராமம் ஆகியவை தான், இந்த அமைப்பின் முக்கிய நோக்கம். இதுவரை, சென்னையில், வளசரவாக்கத்தில் கோவில் குளம், முடிச்சூர் குளம், கீழ்க்கட்டளை ஏரி, மாடம்பாக்கம் ஏரி ஆகியவற்றை இந்த அமைப்பு சுத்தப்படுத்தியுள்ளது.

பெசன்ட் நகர் கடற்கரையையும் சுத்தம் செய்துள்ளது. அடுத்தகட்டமாக, தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள, 17 ஏரிகளை சுத்தப்படுத்த திட்டமிட்டுள்ளது.அமைப்பின் தன்னார்வ தொண்டர்கள் குறித்து கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: சென்னையில் எங்கள் அமைப்பிற்கு, 240தன்னார்வ தொண்டர்கள் உள்ளனர். இதில், 95 சதவீதம் பேர் பள்ளி மாணவ, மாணவியர். அடுத்த தலைமுறைக்கு அவசியமான சொத்து, நீர்நிலைகள் தான்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பணியாற்றுவது மட்டுமல்ல; அடுத்த தலைமுறையாக வரப்போகும் அவர்களுக்கு, நீர்நிலைகளின் அவசியம் தெரிய வேண்டும் என்பதற்காக தான், எங்கள் அமைப்பில் பள்ளி மாணவ, மாணவியரை தன்னார்வ தொண்டர்களாக சேர்க்கிறோம்.

ஊக்குவிக்க வேண்டும்:தற்போதைய நிலையில், சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான நீர்நிலைகள் குப்பை, ஆக்கிரமிப்பு, கழிவுநீர் பிடியில் சிக்கி உள்ளன.நாங்கள் ஏரிகளை சுத்தம் செய்வது தொடர்பாக, சில உள்ளாட்சி அமைப்புகளை அணுகினோம். அங்கு உள்ளாட்சி தலைவர்களை காட்டிலும், அதிகாரிகள் எங்கள் திட்டத்திற்கு ஒத்துழைப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

சில தலைவர்களும் ஆர்வமாக எங்களுக்கு உதவி செய்கின்றனர். எங்கள் அமைப்பின் மூலம், ஒட்டுமொத்த நீர்நிலைகளையும் மீட்க முடியும் என்று நான் சொல்லப்போவதில்லை.எங்களை போன்ற நிறைய தன்னார்வ அமைப்புகள் தோன்றி, நீர்நிலைகளை மீட்க வேண்டும். இதற்கு அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்பது தான் என் வேண்டுகோள். இப்போது முயன்றால் கூட, ஏரிகளைமீட்கலாம். இதில், அரசு செய்ய வேண்டியது, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்; ஏரிகளுக்கு வேலி அமைக்க வேண்டும்.

சுத்தப்படுத்தும் பணியில் எங்களை போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்த வேண்டும். ஏரிகளில் மூலிகை செடிகள் வளர்க்க, சில ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ஊக்குவிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...