லெவல் கிராசிங்கில் வகுப்பு பள்ளியின் வினோத முடிவு


லெவல் கிராசிங் மூடப்பட்டதை திறக்க வலியுறுத்தி, பள்ளி மாணவ, மாணவியரை, ரயில் பாதையில் அமர வைத்து, பாடம் நடத்த முடிவு செய்த பள்ளி நிர்வாகம் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க
உள்ளனர். உத்தர பிரதேசத்தின், பிரதாப்கார் - பைசாபாத் ரயில் பாதையில், மகுன்பூர் என்ற இடத்தில், லெவல் கிராசிங் இருந்தது. அதன் அருகே இருந்த பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு, லெவல் கிராசிங் வசதியாக இருந்தது.திடீரென லெவல் - கிராசிங்கை ரயில்வே நிர்வாகம் மூடிவிட்டது. இதனால், பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியருக்கு சிரமம் ஏற்பட்டது; அதிக தூரம் சுற்றி வர நேர்ந்தது. லெவல் கிராசிங்கை மீண்டும் திறக்க, ரயில்வே நிர்வாகத்தை வலியுறுத்தியும் பயனில்லை. இதனால், ரயில்வே நிர்வாகத்தின் கவனத்தை கவர, பள்ளி நிர்வாகம், வினோதமான முடிவை எடுத்தது. இரண்டு நாட்களுக்கு முன், ரயில் பாதையில் அமர்ந்து, பாடம் நடத்தி, ரயிலை மறிப்போம் என, தெரிவித்தது. இதை அறிந்த மாணவர்களின் பெற்றோர், அந்த நாளில், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து விட்டனர். இதனால், போராட்டம் நடக்கவில்லை. எனினும், தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார், அந்த இடத்தில் மாணவர்கள் இல்லாததை கண்டு, நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த தகவல், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தெரிந்ததும், கொதித்து போயினர். பள்ளி குழந்தைகளை, ரயில் பாதையில் அமர வைத்து, ரயிலை மறிக்க திட்டமிட்டிருந்த பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவித்துள்ளனர். ஒன்றும் அறியாத மாணவ, மாணவியரை, ரயில் மறியலில் ஈடுபடுத்த இருந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாரும் முடிவு செய்துள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...