மூன்று ஆண்டுகளாக சம்பளம் இல்லை:சிறப்பு ஆசிரியர்கள் பெரிதும் பாதிப்பு


மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகள் சிறப்பு திட்டத்தில் பணிபுரியும் சிறப்பாசிரியர்களுக்கு, மூன்றாண்டு சம்பளம் வழங்கப்படாததால், அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில், மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு என, மத்திய அரசு நிதியுதவியுடன்,
ஐ.இ.டி.எஸ்.எஸ்., என்ற சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், கண் பார்வை மற்றும் காது கேட்கும் திறன் இழப்பு, மன வளர்ச்சி குறைவு உள்ளிட்ட, மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளின் கல்விக்காக, பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் துவங்கப்பட்டன.

10க்கும் மேற்பட்ட மாற்றுத் திறன் குழந்தைகள் உள்ள பள்ளிகளில், தனி வகுப்பு துவங்கி, அதற்கென, சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.தமிழகம் முழுவதும், இதே போல், மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்காக, பல பள்ளிகளில், சிறப்பு ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு, 2010ல் இருந்து, இதுவரை, சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால், கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இது குறித்து சிறப்பு ஆசிரியர்கள் கூறியதாவது:கடந்த, 2009ல், மாற்றுத் திறனாளிகளுக்கு, சிறப்பு வகுப்புகள் துவங்கப்பட்டு, அதற்கென, ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஆறு மாத சம்பளமும்; கடந்த மாதம், ஆறு மாத சம்பளமும் என, இதுவரை, ஓராண்டுக்குரிய சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இன்னும், மூன்றாண்டு சம்பள பாக்கி, நிலுவையில் இருப்பதால், ஆசிரியர்கள், பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இயக்குனரக அலுவலர்கள், உடனடியாக நடவடிக்கை எடுத்து, சம்பள நிலுவையை வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...