மாணவர்களுக்கு எட்டாத இலவசம்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, கல்வி ஆண்டு முடியும் தறுவாயில் கூட, புத்தகப் பை உட்பட, இலவச பொருட்கள் வழங்கப்படவில்லை. அரசு பள்ளி மாணவர்களிடம் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், பஸ் பாஸ், சீருடை, நோட்டுப் புத்தகம், காலணி உட்பட, 16 இலவச பொருட்கள் வழங்கப்படும் என, அரசு அறிவித்தது. ஆனால், 13 பொருட்களை மட்டு
மே வழங்கி உள்ளனர். கல்வி ஆண்டு முடிய உள்ள நிலையில், ஆறு முதல், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, இலவச வடிவியல் பெட்டி - ஜியோமெட்ரி பாக்ஸ், ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை, மாணவர்களுக்கு காலணி, ஒன்று முதல், பிளஸ் 2 மாணவர்களுக்கு புத்தகப் பை வழங்கப்படவில்லை. கல்வி ஆண்டு முடிய உள்ள நிலையில், இலவச பொருட்கள் கிடைக்குமா, என்ற எதிர்பார்ப்பு, மாணவர்களிடம் எழுந்துள்ளது. கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "கல்வி ஆண்டு முடிவதற்குள், எஞ்சிய இலவச பொருட்களை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அரசு உத்தரவுக்கு பின், விடுமுறை நாட்களில் கூட, மாணவர்களை அழைத்து கொடுத்து விடுவோம்' என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...