தேர்வுக்கு படிக்க, இரவு முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்கவேண்டும் என்று மாணவரும், பெற்றோரும், மின்வாரியத்துக்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர், மின்தடையின்றி தேர்வெழுத, தேர்வு மையங்கள் அமைந்துள்ள பள்ளிகளில் தடையில்லா மின்சாரம்
வழங்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு, நாளை துவங்கி, மார்ச், 27ம் தேதி வரை நடக்கிறது. தமிழகத்தில், 7 லட்சத்து, 91 ஆயிரத்து, 924 மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 2,020 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் மாணவருக்கு தேவையான குடிநீர், கழிவறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை, அந்தந்த தேர்வு மையங்களின் முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.

"ஆனந்த' அதிர்ச்சி":


மின்தடை காரணமாக மாணவர்களின் கவனம் சிதறக்கூடாது' என்பதில் கல்வித்துறை அதிகாரிகள் மிகவும் கவனமாக இருக்கின்றனர். இதற்காக, தேர்வு மையங்களில் டீசல் ஜெனரேட்டர் வாடகைக்கு வாங்கி வைக்கப்பட்டுள்ளது. ஜெனரேட்டர்கள் சரியாக இயங்குகிறதா? என்று, ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன், தமிழ்நாடு மின்வாரியம், அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களிடம், தேர்வு மையங்கள் அமைந்துள்ள பள்ளிகள் குறித்த பட்டியலை கேட்டுள்ளது. பட்டியலில் இடம்பெற்றுள்ள பள்ளிகளுக்கு உட்பட பகுதியில் மட்டும், காலை, 10 மணி முதல், மதியம், 1 மணி வரை, தடையில்லாத மின்சாரம் வழங்க திட்டமிட்டு, தேர்வுமைய பள்ளிகளின் பட்டியலை மின்வாரியம் வாங்கியதாக கல்வித்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
மின்வாரிய வட்டாரத்தில் விசாரித்தபோது, "தேர்வு மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது உண்மை. முன்கூட்டியே அறிவித்து, மின்சாரம் தரமுடியாமல் போய்விட்டால், அரசுக்கு பெரிய கெட்ட பெயர் ஏற்படும். முழுமையாக செயல்படுத்த பிறகு, தடையில்லா மின்சாரம் கொடுத்தோம் என்று அரசு அறிவிக்கும்' என்றனர்.


எதிர்பார்ப்பு:


இவர்களின் கூற்றின்படியே, தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டால், மாணவர்கள் உற்சாகத்துடன் தேர்வெழுவர் என்பது நிதர்சனமான உண்மை. இதேபோல, பிளஸ் 2 மாணவர் மட்டுமல்லாது, எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களும், தேர்வுக்கு படிக்க, இரவு முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்கவேண்டும் என்று மாணவரும், பெற்றோரும், மின்வாரியத்துக்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுக்கின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...