"மதுர...குலுங்க குலுங்க...,' : தேரோடும் வீதியில் ஊர்கூடும் திருவிழா


"மாமதுரை போற்றுவோம்'விழாவையொட்டி, "தேரோடும் வீதியில் ஊர்கூடும் திருவிழா' என்ற தலைப்பில், அலங்கார வாகனங்கள் மற்றும் கலைகளின் அணிவகுப்பு ஊர்வலம் நேற்று மாலை மதுரையில் நடந்தது. மதுரைக் கல்லூரி மைதானத்தில் மாலை 4.40 மணிக்கு, கவர்னர்
ரோசய்யா துவக்கி வைத்தார்.கொம்பிசை, காவடி, கரகம், நடமாடும் குதிரை, நாதஸ்வரம், தவில், ஜிக்காட்டம், பலவேசம், பொய்க்கால்குதிரை, நையாண்டி மேளம், பறையாட்டம், தப்பாட்டம், தேவராட்டம், செண்டை மேளம், கொக்கிலிகட்டை ஆட்டம், பேண்ட்வாத்தியம், தற்காப்புக்கலைகளை நிகழ்த்தியவாறு கலைஞர்கள் சென்றனர். பெண்கள் முளைப்பாரி சுமந்தனர். கண்ணகி தலைவிரி கோலத்துடன், கையில் சிலம்பு ஏந்தி நீதிகேட்டதை குறிக்கும் வகையில் பெண்கள் வேடமிட்டிருந்தனர்.மன்னர், அரசி குதிரைசாரட் வண்டியில் பயணம், ரோமானியர்களுடனான பண்டமாற்றுமுறை, பென்னிகுக் கட்டிய முல்லைப் பெரியாறு அணை, மகாத்மா காந்தி மதுரைக்கு ரயிலில் வந்தது, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, கள்ளழகர் வைகையில் இறங்குதலை குறிக்கும் மாதிரிகளுடன் வாகனங்கள் அணிவகுத்தன. பெரியார் பஸ் ஸ்டாண்ட், மேலமாசிவீதி, விளக்குத்தூண், கீழமாசி வீதி, யானைக்கல் வழியாக தமுக்கத்தை அடைந்தது. வழியெங்கும் மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். இதையொட்டி, போக்குவரத்தில் மாற்றம் செய்திருந்தனர். போலீசாருடன் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...