மாணவர்களின் தேர்வு அச்சத்தை போக்கும் திருச்சூர் போலீசார்

பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பான அச்சத்தை போக்கும் போலீசார், மாணவர்களின் தேர்வு பயத்தையும் போக்கும், ஆக்கப்பூர்வமான
நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். கேரளா,
திருச்சூர் பகுதியில், எஸ்.எஸ்.எல்.சி., மற்றும், பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவ, மாணவியரின் தேர்வு அச்சத்தை போக்கும் பணியில், போலீசார் ஈடுபட்டுள்ளனர். எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதும், சிறு வயது மாணவ, மாணவியருக்கு, தேர்வு தொடர்பான அச்சம் ஏற்படுவது வாடிக்கையே.
அத்தகைய அச்சத்தை, போலீசாரை வைத்து போக்கடிக்கும் முயற்சியில், கேரளாவின், திருச்சூர் நகர, தொண்டு நிறுவனம் ஈடுபட்டுள்ளது. "நிழல் சவ்ரிட சங்கம்' என்ற அமைப்பினர், மாணவர்களின் தேர்வு பயத்தை, போலீஸ் அதிகாரிகளை கொண்டு போக்கி வருகின்றனர். தேர்வை எதிர்கொள்வது குறித்த அறிவுரை, தேர்வு பதட்டத்தை தவிர்க்கும் முறைகள், தங்களின் பள்ளி அனுபவங்கள் என, மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும், பல குறிப்புகளை, திருச்சூர் பகுதி போலீஸ் அதிகாரிகள்,
அந்தந்த பகுதி பள்ளிகளுக்கு சென்று வழங்கி வருகின்றனர். அப்பகுதியை சேர்ந்த மனோதத்துவ வல்லுனர், கே.ஜி.ஜெயேஷ் என்பவர், இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். எஸ்.எஸ்.எல்.சி., பொது தேர்வுக்கு, இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், திருச்சூர் பகுதி பள்ளி ஒவ்வொன்றுக்கும் செல்லும் போலீஸ் அதிகாரிகள், மனோதத்துவ வல்லுனர்களாகவும், ஆசிரியர்களாகவும்
மாறி, மாணவ, மாணவியரின் அச்சத்தை போக்கி வருகின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...