அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க புதிய திட்டம்- புதிய மாணவர்களை அழைத்து வரும் மாணவர்களுக்கு பரிசு திருச்சி மாவட்டத்தில் இன்று தொடங்கியது

திருச்சி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களை அதிகம் சேர்க்க உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவ ர்கள் மூலம் நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிக மாணவர்களை சேர்க்க முயற்சி எடுப்போருக்கு பரிசு வழங்க முடிவு
செய்துள்ளனர். இந்த திட்டம் திருச்சி மாவட்டத்தில் உள்ள 166 அரசு பள்ளிக ளில் இன்று தொடங்கியது.
தமிழகம் முழுவதும் 34 ஆயிரத்து 871 அரசு தொட க்கப்பள்ளிகள், சுமார் 10 ஆயிரம் நடுநிலைப் பள்ளிகள், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளிகள், 5 ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட மேல் நிலைப்பள்ளிகள் உள்ளன.
இவற்றில் சுமார் 1.50 கோடி மாணவ மாணவிகள் படிக்கின்றனர். மாநிலக் கல்வி வாரியம், மெட்ரிக்குலேசன், ஆங்கிலோ இந்தியன், ஓரிய ன்டல் என நான்கு வகை பள்ளிகளிலும் ஒரே பாடத் திட்டமாக சமச்சீர் கல்வித் திட்டம் உள்ளது.
நடப்பு கல்வியாண்டில் 8ம் வகுப்பு வரை முப்பருவ கல்வி முறை, முழுமையான மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை அறிமுகப் படுத்தப் பட்டுள் ளது. அரசு பள்ளிகளில் தகுதித் தேர்வின் அடிப் படையில் ஆசிரியர் நியம னம், கணினி வகுப்பறைகள், உரிய உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச கல்வி, சீருடை, பாடப் புத்தகங்கள், மடிக் கணினி, மதிய உணவு, கால ணிகள், இலவச பேருந்து பயண அட்டை, கணித உப கரணப் பெட்டி, புவியியல் வரை படம், சிறப்பு ஊக்கத் தொகை என 14 வகை யான சிறப்புத் திட்டங்கள் உள் ளன.
இத்தனை சலுகைகள், வசதிகள் இருந்தபோதிலும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர் க்கை குறைந்து கொண்டே வருகிறது. ஒரே மாதிரியான பாடம், உதவித் திட்டங்கள் இருந்தும் தனியார் பள்ளி களில் தான் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டுகிறார்கள்.
அரசு பள்ளிகளின் சிறப்புகளை எடுத்துக் கூறி, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர்களுக்கு உத்தர விட் டுள்ளது. இதற்காக மாவட் டவாரியாக கல்வித் துறை அலுவலர்கள் நடவ டிக்கை எடுத்து வருகின் றனர்.
திருச்சி மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் மூலம் மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. இதன்படி, மாவட் டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளில், இன்று காலை 9.15 மணி அளவில் நடந்த இறை வணக்க கூட்டத்தில், அரசு பள்ளிகளில் உள்ள சிறப்புத் திட்டங்கள், மாண வர் களுக்கு கிடை க்கும் பயன்கள், தர மான கல்வி குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
இறைவணக்கத்தில் தலைமை ஆசிரியர்கள் 5 நிமிடம் மாணவர்கள் மத்தியில் அரசு பள்ளிகளின் சிறப்புகள் குறித்து பேசினர். தற்போது அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவர்கள் தங்களது தம்பி, தங்கை கள், உறவினர் குழந் தைகள் மற்றும் அருகில் உள்ள குழந் தை களை அரசு பள்ளியில் சேர்க்க வலியுறுத்தும்படி கேட்டுக்கொண்டனர்.திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகள் 166லும் இன்று இந்த பிரசாரம் தொடங்கியது. இதுபோல அரசு மானியம் பெறும் பள்ளிகள் 185லும் இதுபோல விளக்கம் அளிக்கப்பட்டது.
இது குறித்து திருச்சி மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மைக் கல்வி அலுவ லர் ஜெயக்குமார் கூறியதாவது:
அரசு பள்ளி மாணவர் களுக்கு தகுதியான ஆசிரியர்களைக் கொண்டு, தரமான கல்வி அளிக்கப்படுகிறது. இலவச கல்வி உள்ளிட்ட 14 வகையான சிறப்புத் திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. ஆகையால், உதவித் திட்டத்துடன் இலவச கல்வி அளிக்கும் அரசு பள்ளிக ளில் மாணவர்களை சேர் க்க உயர்நிலை, மேல்நிலை மாணவர்களிடம் எடுத்துச் சொல்லப்பட்டது.அரசு பள்ளிகளில் அதிக மாணவர்களை சேர்க்க முயற்சி எடுக்கும் மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், பரிசு வழங்கப்படும். தலைமையாசிரியர்கள், பெற்றோர் இந்த புதிய முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...