மாணவர்களுக்கு ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுப்பது ஆசிரியர்களின் கடமை: அமைச்சர்

நாட்டில் பாலியல் கொடுமைகளைக் கட்டுப்படுத்த மாணவர்களுக்கு ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுப்பது ஆசிரியர்களின் கடமை என்று ஆதிதிராவிடர் மற்றும்  பழங்குடியினர் நலத் துறை அமைச்சர்
ந.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
  காரைக்குடி அருகே திருமயம் செயின்ட் ஜோசப் பாலிடெக்னிக் கல்லூரியில் புதுக் கோட்டை, சிவகங்கை மாவட்ட அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கு கலை, இலக்கிய, விளையாட்டுப் போட்டிகள் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
  இதில் மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கி அமைச்சர் பேசியது:
  ஆசிரியர்கள் கூறுவதைக்கேட்டு மாணவர்கள் நல்ல முறையில் படித்து தங்கள் வாழ்க் கையை வளப்படுத்திக்கொள்ள வேண்டும். மாணவர் ஒவ்வொருவரும் கல்வி கற்றலிலும் ஒழுக்கத்தையும் கற்கவேண்டும். ஒழுக்கமான கல்வியே உன்னதமான கல்வியாகும்.  நல்லொழுக்கம் இருந்தால்தான் நல்ல கல்வி கிடைக்கும். நல்ல பதவி தேடிவரும்.
  நாட்டில் பாலியல் கொடுமைகளைக் கட்டுப்படுத்த ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஒழுக்கமாக வாழக் கற்றுக்கொடுப்பது தலையாய கடமையாகக் கொள்ளவேண்டும் என்றார்.
  விழாவில் செயின்ட் ஜோசப் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஞா.அடைக்கலசாமி  தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஞா.அந்தோணிசாமி, கல்லூரிச் செயலர் அ. ஞானஅருள்ராஜ், இணைச்செயலர் சே.கிருபாகரன் ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.  கல்லூரி முதல்வர் எம்.பாலமுருகன் விழா குறித்து விளக்கிப் பேசினார்.   இதில் புதுக்கோட்டை முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.நெடுஞ்செழியன், திருமயம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் எம்.பி.முத்துசாமி, துணைத் தலைவர் ராமு ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
  முன்னதாக திருவேலங்குடி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் கவிஞர் கா.நாகப்பன் வரவேற்றார். கல்லூரி மக்கள் தொடர்பு அலுவலர் ஏ.முருகேசன் நன்றி கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...