தேர்வு நேரத்தில் விளையாட்டு போட்டிகள் பங்கு பெறுவதில் மாணவர்களுக்கு சிக்கல்

தேர்வு நெருங்கும் ரேநத்தில், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மாணவர்களுக்கு உலக திறானாய்வு போட்டிகள், நடத்தவுள்ளதால் மாணவர்கள் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பள்ளிகளில் 6 முதல் எட்டு வரை படிக்கும் மாணவர்களுக்கு, திறனாய்வுகளை சோதனை செய்யும் விதமாக, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விளையாட்டு போட்டிகளை நடத்தும். பள்ளிகளில் நடத்தும் போட்டிகளில் முதல் மூன்று இடம் பெறும் மாணவர்களை தேர்வு செய்து, கல்வி மாவட்ட அளவில், பின் வருவாய் மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்படும்.
இதில் முதல் இடங்களை பெறும் மாணவர்களை தேர்வு செய்து அவர்களிடையே உள்ள தடகள திறன், விளையாட்டுகளில் உள்ள திறன் சோதனை செய்யப்படும். திறனுக்கேற்ப விளையாட்டுகள் தேர்வு செய்து,அவர்களுக்கு சர்வதேசஅளவில் நடக்கும் போட்டிகளில் பங்கு பெற, சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும். விளையாட்டு விடுதிகளுக்கும் இதன் மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தற்போது விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கல்வி மாவட்ட அளவிலான திறனாய்வு போட்டிகளை துவக்கவுள்ளனர். அரையாண்டு தேர்வுகள் முடித்து ஆண்டு இறுதி தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி வருகின்றனர். தேர்வு நேரத்தில் போட்டிகள் நடத்துவதால், மாணவர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும். மாணவர்கள் இறுதி தேர்வு ஏப். முதல் வாரத்தில் துவங்கவுள்ளது. தற்போது மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடந்து வருகிறது. மாணவர்கள் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் போது, விளையாட்டு போட்டிகளுக்கு அனுப்ப பெற்றோர்களும் முன் வர மாட்டார்கள். திறனாய்வு போட்டிகளே மாணவர்கள் அனைவரும் பங்கேற்று, அதில் திறமையுள்ள மாணவர்களை தேர்வு செய்து, சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வைப்பது தான் நோக்கம். பள்ளி துவக்க நாட்களில் நடத்த வேண்டிய திறனாய்வு விளையாட்டு போட்டிகளை, ஆண்டு இறுதியில் நடத்துவதால் மாணவர்களுக்கு படிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...