"கிட்னி' பாதிப்பால் தத்தளிக்கும் கிராமம்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே, டி.வேப்பங்குளம் ஊராட்சி உட்பட்ட, ஏ.தொட்டியங்குளத்தில், "கிட்னி' பாதிப்பால் பாதிக்கப்பட்டு, பலர் இறந்துள்ளனர். மூன்று வயது குழந்தைக்குக் கூட, இந்த பாதிப்பு உள்ளதால், சோகத்தில் மூழ்கிய இக்கிராமத்தினர், ஊரை காலி செய்ய
முடிவுக்கு வந்துள்ளனர். காரியாபட்டி ஏ.தொட்டியங்குளத்தில், 300க்கு மேற்பட்ட குடும்பங்கள், விவசாயத்தை நம்பி பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
இவர்களின், நிம்மதியான வாழ்க்கைக்கு இடையே, "கிட்னி' பாதிப்பு என்ற பெயரில், விதி விளையாட துவங்கியது. இதன் பாதிப்பால், இக்கிராமத்தை சேர்ந்த, பலர் இறந்துள்ளனர். 2005க்கு பின் ஏற்பட்ட, இந்த பாதிப்பை அறியாத கிராமத்தினர், முதலில் உடல் நிலை பாதிப்பதால், இறப்பு ஏற்படுவதாக கருதினர்.

ஆனால், தொடர்ந்து பாதிக்கப்பட்ட பலர், அடுத்தடுத்து, இளம் வயதிலே இறந்ததால், பீதியடைந்த கிராமத்தினர், மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். பலருக்கு உப்புச் சத்து, கல்லடைப்பு இருப்பது தெரிந்தது. மூன்று வயது குழந்தைகள், உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்ததில், உப்புச் சத்து, கல்லடைப்பு, கை, கால் சோர்வு என, பல வித பிரச்னைகள் காணப்பட்டன. இதை தொடர்ந்து, சில நாட்களிலே "கிட்னி' பாதித்து, இறப்பதும் தொடர்ந்தது.


கடந்த எட்டு ஆண்டுகளில், இக்கிராமத்தில் மட்டும், கிட்னி பாதிப்பால், 25 பேர் இறந்துள்ளனர். குடிநீரினால், இப்பிரச்னை ஏற்படுவதாக கருதி, அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. இப்பிரச்னை அருகில் உள்ள கிராமத்தினருக்கு பரவியதையடுத்து, சுற்று கிராமத்தினரும் சோகத்தில் உள்ளனர். இனி இங்கு வசித்தால், உயிர் வாழ முடியாது என கருதிய மக்கள், ஊரை காலி செய்யும் முடிவுக்கு வந்துள்ளனர்.


அக்கிராம மாணவி சுகுணா: ஒன்பதாம் வகுப்பு படிக்கிறேன். <உடல் சோர்ந்து, கை, கால் வீக்கமாக இருந்தது. இடுப்பு பகுதியில் வலி இருந்தது. மருத்துவ பரிசோதனையில் "கிட்னி' பாதிக்கப்பட்டது, தெரிந்தது. மருந்து சாப்பிட்டு வருகிறேன். குடிநீரில், சுண்ணாம்பு சத்து அதிக அளவில் இருப்பதால், கிட்னி பாதித்திருப்பதாக டாக்டர்கள் கூறினர். எனக்கு ஏற்பட்ட இப்பிரச்னை மற்றவர்களுக்கு வரக்கூடாது, அதற்குள், நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மணிகண்டன் : குடிநீரை குடத்தில் பிடித்து வைக்கும் போது, சுண்ணாம்பு போல் கறை படிகிறது. சாப்பாட்டில், தண்ணீரை ஊற்றி காலையில் பார்த்தால், மஞ்சள் நிறத்தில் நுரைகள் காணப்படுகிறது. பல்வேறு மருத்துவ மனைகளிலிருந்து, வெளியேறும் கழிவுகளை கிராமத்தின் அருகில் எரிப்பதால், துர்நாற்றம் ஏற்படுகிறது. காற்று பலமாக வீசும்போது, ஊருக்குள் இருக்க முடியாது. சுவாச கோளாறும் ஏற்படுகிறது.


சுப்பு: பெண்கள் எல்லோருக்கும், இந்த பிரச்னை உள்ளது. வெளியில் சொல்ல அச்சப்பட்டு, சொல்ல முடியாமல் தவிக்கிறோம். காய்ச்சல் என்றால் கூட, கிட்னி பாதிக்கப்பட்டிருக்குமோ என்ற பீதி ஏற்படுகிறது. தற்போது, இந்த நீரை குடிக்க பயந்து, மினரல் வாட்டர் கேன்களை வாங்கி பயன்படுத்துகிறோம். எத்தனை நாளைக்கு, இப்படி பணம் செலவு செய்ய முடியும். இளம் வயதிலே பலர் வாழ்க்கையை இழந்து, சிறு குழந்தைகளுடன் விதவையாக தவிக்கின்றனர்.


எங்களுக்கு, உரிய நிவாரணம் கிடைக்காவிட்டால், ஒட்டு மொத்தமாக, ஊரை காலி செய்ய முடிவு செய்துள்ளோம்.ஊராட்சித் தலைவி சின்னப்பிள்ளை: பலர் சிறு வயதில் இறந்துள்ளனர். மருத்துவ கழிவுகளை எரிப்பதாலும், குடிநீரினாலும் இப்பிரச்னை ஏற்படுகிறது என, மக்கள் கூறுகின்றனர். அதிகாரிகளிடத்தில் புகார் கொடுத்தேன். இதுவரை நடவடிக்கை இல்லை. மக்களுக்கு உயிருக்கு உத்தரவாதம் இல்லாததால், ஊரை காலி செய்ய முடிவு எடுத்துள்ளனர். இனி அதிகாரிகள் தான் தீர்வு காண வேண்டும். சுகாதாரத்துறை இணை இயக்குனர் வரதராஜனிடம் கேட்ட போது, ""கிராமத்திற்கு சென்று, தண்ணீரை சோதனை செய்து பார்த்தால் தான், உண்மை நிலவரம் தெரியும்'' என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...