சமச்சீர் கல்வி முறை ராமேஸ்வரத்தில் ம.பி., கல்வித்துறை அதிகாரிகள் முகாம்


ம.பி.,யில் சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்துவதற்காக, அம்மாநில கல்வித்துறை அதிகாரிகள் ராமேஸ்வரத்தில் முகாமிட்டு, முன்னாள் ஜனாதிபதி அப்துல்காலம் படித்த, அரசு பள்ளியில் நடத்தப்படும்
இக்கல்வி முறை குறித்து கேட்டறிந்தனர்.தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட சமச்சீர் கல்வியால், மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், புத்தகம், தனி அட்டையில் படம் விளக்கத்துடன், செயல்விளக்க பாட திட்டம் மாணவர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இப்பாட முறையை, மத்திய பிரதேசம் துவக்க, நடுநிலைப்பள்ளியில் செயல்படுத்திட, அம்மாநில அரசு ஆலோசித்தது. அதன்படி, அம்மாநில அரசு ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி ஆராய்ச்சி துறையின் இயக்குனர் ஜாகித் ஜெயின், கூடுதல் இயக்குனர் ஓ.பி. சர்மா தலைமையில், 20 பேர் தமிழகம் வந்தனர். இதில் ஒரு குழுவினர், ராமேஸ்வரத்தில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் படித்த, மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி எண் 1ல், சமச்சீர் கல்வி செயல்முறை பாடங்களை கற்பிக்கும் முறை குறித்து ஆசிரியர்களிடமும் மற்றும் புரியும் திறன் குறித்து மாணவர்களிடமும் கேட்டறிந்தனர்.இது குறித்து ம.பி., கல்விக்குழு உறுப்பினர் முகேஷ் மால்விக் கூறியதாவது: தமிழகத்தில் துவக்க, நடுநிலைப்பள்ளியில் அமல்படுத்தப்பட்ட, சமச்சீர் கல்வி மற்றும் படத்துடன், செயல்விளக்க கல்விமுறை குறித்து, ஆச்சரியப்பட வைக்கிறது. இப்பாட முறை, மாணவர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று உள்ளது. மதுரை, ராமநாதபுரம் மாவட்டத்தில், இரு தினங்களாக ஆய்வு செய்தோம். இக்கல்வி முறையை, எங்கள் மாநில பள்ளிகளில் அமல்படுத்த, அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளோம், என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...