டி.இ.ஓ., பதவி உயர்வு "பேனல்': தத்தளிக்கும் தலைமையாசிரியர்கள்

மாநிலம் முழுவதும் மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,) பதவி உயர்வு பேனலில் பெயர் இடம்பெற்றுள்ள தலைமையாசிரியர்கள், "ரகசிய அறிக்கை' (கான்பிடென்ஷியல் ரிப்போர்ட்) பெற உயர் அதிகாரிகளை
தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு உயர்நிலை பள்ளிகளில், 2006ம் ஆண்டு தலைமையாசிரியர்களாக சேர்ந்த 120 பேர், பணிமூப்பு அடிப்படையில் இந்தாண்டுக்கான டி.இ.ஓ., பதவி உயர்வு பேனலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், தலைமையாசிரியராக பணியாற்றியபோது, அவர்களுக்கு உயர் அதிகாரியாக இருந்த டி.இ.ஓ.,க்கள், சி.இ.ஓ.,க்களிடம், தங்களின் பணிக்கால செயல்பாடுகள் குறித்து "ரகசிய அறிக்கை' பெற்று, அதை பள்ளி கல்வி இயக்குனருக்கு சமர்ப்பிக்க வேண்டும். பேனலில் நீடிக்க ஒரு தலைமையாசிரியருக்கு இது மிக முக்கிய பணி. இந்த நடைமுறை, பேனலில் உள்ள தலைமையாசிரியர்களுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. 2006ம் ஆண்டு முதல் பணியாற்றிய, உயர் அதிகாரிகளை அவர்கள் தேடி அலைகின்றனர். அவர்கள் பணிக்காலத்தில் டி.இ.ஓ., சி.இ.ஓ.,க்களாக பணியாற்றிய பலர் வெளி மாவட்டங்களிலும், பணி ஓய்வு பெற்று அவர்கள் எங்கே உள்ளார்கள் என்றே தெரியவில்லை. அவர்களின் முகவரி தேடி தலைமையாசிரியர்கள் அலைகின்றனர். இதில் சிலர் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர். இதனால் "ரகசிய அறிக்கை'யை எப்படி பெறுவது என்று தெரியாமல் தலைமையாசிரியர்கள் தத்தளிக்கின்றனர்.

தமிழ்நாடு அரசு உயர்நிலை மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் கழக மதுரை மாவட்ட செயலாளர் பாஸ்கரன் கூறியதாவது: இம்முறை நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்று. பல ஆண்டுகளுக்குமுன் பணியாற்றிய உயர் அதிகாரிகளை தேடி அலைய வேண்டியுள்ளது. இந்த நடைமுறையை மாற்றி, தலைமையாசியர்கள் பணிக்காலத்தின்போது அவர்களின் "எஸ்.ஆர்.' புத்தகங்களில், 6 மாதங்களுக்கு ஒருமுறை, அவ்வப்போது பணியில் உள்ள டி.இ.ஓ.,க்கள், சி.இ.ஓ.,க்கள் அறிக்கை அளித்து, அதையே "ரகசிய அறிக்கை'யாக அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளும் வகையில் மாற்றம் கொண்டுவரவேண்டும். அப்போதுதான் அது ரகசிய அறிக்கையாகும், என்றார்.

இடிக்கும் "லாஜிக்': "ரகசிய அறிக்கை' என்பது ஒரு தலைமையாசிரியர் அவர் பணிக்காலத்தின்போது, அவருக்கு தெரியாமல் அவரது பணி செயல்பாடு, சிறப்புக்கள், நடத்தை குறித்து உயர் அதிகாரிகள் அளிக்கும் சான்று. ஆனால், தற்போதுள்ள நடைமுறையால் "ரகசிய அறிக்கை'யின் "லாஜிக்' கேள்வி குறியாகிறது. "தன்னுடைய உயர் அதிகாரியிடம் அல்லது உயர் அதிகாரியாக பணியாற்றியவரிடம் சென்று, ""நான், உங்களுக்கு கீழ் பணியாற்றிய காலத்தில் என் பணி செயல்பாடு குறித்த ரகசிய அறிக்கையை என்னிடமே தாருங்கள்'' என்பது எப்படி ரகசிய அறிக்கையாக இருக்க முடியும் என்று, தலைமையாசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.



SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...