இன்றைய ஸ்பெஷல் -"பறவையில் தனித்தன்மை".



உலகில் இருக்கக்கூடிய பறவை இனங்களில் விசித்திரமானது ஹம்மிங்கு ( Humming ) பறவை. இந்த ஹம்மிங்கு பறவையினம் 17 வகைகளை கொண்டுள்ளது அறியப் பட்டுள்ளது. எமது அவதானிப்பினால் இந்த பறவைகளின் முக்கிய உணவு தேன் என்பதால் தமிழில் இதனை
தேன்குடிக்கும் குருவி அல்லது தேன்குருவி எனவும் அழைகின்றோம் என்ற போதிலும் இதன் பல ஆச்சரியப்படும் தகவல்கள் அவதானிப்பில் தெரிந்திருப்பதிலை. மனிதருக்கு தீங்கு எதுவும் செய்யாத உயிரினமாகிய இப் பறவையினம் பற்றி பலகாலம் ஆராச்சி செய்பவர்கள் தந்துள்ள தகவல்களில் முக்கியமான சில பின்வருமாறு.
  • பறவைகளிலேயே இந்த பறவையினால் மட்டும் வலம் , இடம் , மேல் , கீழ் , பின்பக்கமாக , தலைகீழாக பறக்க முடியும்.
  • இந்த பறவை ஒரு செக்கனில் 80 தடவை இறக்கைகளை அசைக்கும் வல்லமை கொண்டது.(இதனால் மனித கண்ணுக்கு இறக்கை துடிப்பது தெளிவாக தெரிவதிலை).
  • ஹம்மிங்கு பறவையின் முக்கிய உணவு தேன் என்பதுடன் இப் பறவையானது பூச்சி , பூக்களின் மகரந்தம் , மரங்களில் இருந்து வடியும் ஊனம் (பிசின்) என்பவற்றையும் உண்கின்றது.
  • ஹம்மிங்கு பறவைகள் இதயத்துடிப்பு , சுவாசம் என்பன மிக வேகமும் , அதிக உடல் வெப்பமும் கொண்டவை , இவை காரணமாக ஹம்மிங்கு பறவைகள் அடிக்கடி உணவை உட்கொள்கின்றன. ஒருநாளில் ஹம்மிங்கு பறவை தனது மொத்த எடையின் மூன்றின் இரு பகுதியளவு (2/3) உணவை உட்கொள்கின்றது.
  • ஹம்மிங்கு பறவை மற்றய பறவைகள் போல் நடப்பதோ அல்லது தத்துவதோ கிடையாது , மாறாக இவை இருந்த இடத்தில் அதிக வேகமான இறக்கை துடிப்புடன் பறந்து செல்கின்றன.
  • மிக அதிவேகமாக மணிக்கு 27 மைல் பறக்க வல்ல ஹம்மிங்கு பறவை திடீரென ஓரிடத்தில் நிறுத்த வல்லன என்பதுடன் வேண்டிய இடத்தில் மிருதுவாக தரை இறங்கும் திறமையும் கொண்டவை.
  • ஹம்மிங்கு தனது நாக்கினை இசை மீட்டவும் , பூச்சிகளை பிடிப்பதற்கும் உபயோகிக்கின்றது.
  • காலநிலை மாற்றத்தின் போது வெவ்வேறு இடத்திற்கு (நாட்டிற்கு) இடம்பெயரும் ஹம்மிங்கு பறவைகளானது 2,000 மைல் தூரம் வரை பறக்க வல்லனவாகும்.
  • ஹம்மிங்கு பறவையின் இறக்கை அதன் தோள் பட்டையில் மட்டும் பல கோண அசைவுகளுக்கு அசையவல்லது . மேலும் இப்பறவை தனது உடலை செங்குத்தாகவும் இறக்கைகளை கிடையாகவும் நிறுத்திய நிலையில் வைத்திருக பறக்க வல்லனவாகும்.
  • (இந்த வரி எனது சொந்த கருத்து !) பல அற்புத தன்மை  கொண்ட இந்த பறவையினை படைத்த ஆண்டவன் இந்த பறவை மட்டும் தேன் அருந்தும் வசதி உடைய மலரை (படத்தினில் காணவும்) படைத்துள்ளார் ?.
  • இத்தனை மகா சக்தி உள்ள பறவையினை பலர் அவதானிப்பது மட்டுமல்ல அதற்காக பல இணைய தளங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. ( ஹம்மிங்கு  பறவை பற்றிய பல இணைய தளங்களில் ஒன்று hummingbirdworld.com.)

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...