எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் புத்தக வினாக்களையே கேட்டால் மாணவர் திறனை சோதிக்க உதவாது


தமிழகம், புதுவையில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு, மார்ச் 27ம் தேதி தொடங்குகிறது. கடந்தாண்டு எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் 2 மதிப்பெண் மற்றும் 5 மதிப்பெண் பிரிவுகளில் தலா ஒரு வினா, கட்டாயம் விடையளிக்கும் வினாவாக கேட்கப்பட்டு இருந்தது. இந்த வினா, புத்தகத்தில் பயிற்சி வினா பகுதியில் இருந்து கேட்காமல், வினாத்தாள்
வடிவமைப்பு குழுவால் சொந்தமாக தயாரிக்கப்பட்ட வினாவாக இருந்தது. 1 மதிப்பெண் பிரிவில் 15 வினாக்கள் கேட்கப்படுகின்றன.

 இதில், 5 வினாக்கள் சொந்தமாக தயாரிக்கப்பட்ட வினாவாக இருந்தது. இதன் காரணமாக, கடந்தாண்டு தேர்வில் Ôசென்டம்Õ பெறுவதும் கணிசமாக குறைந்தது. இந்நிலையில், வரும் பொதுத்தேர்வின்போது 2 மற்றும் 5 மதிப்பெண் பிரிவில் கட்டாய வினா பகுதியில் கேட்கப்படும் வினாக்களும் புத்தகத்தில் இருந்தே கேட்கப்படும் என்று கூறப்பட்டது.
நேற்று முன்தினம் திடீரென்று, ஒரு மதிப்பெண் பிரிவில் உள்ள 15 வினாக்களுமே புத்தகத்தின் பயிற்சி வினா பகுதியில் இருந்தே கேட்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித் துறை அவசர அவசரமாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது.

தேர்வு நெருங்க உள்ள நிலையில், வினாத்தாள் வடிவமைப்பு குறித்து வரும் திடீர் தகவல்களால் ஆசிரியர்கள், மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். வினாத்தாள், எந்த வகையில் வரும் என மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறுகையில், ''புத்தக வினாக்களை கேட்பதால் பல மாணவர்கள் கணக்கு பாடத்தைக் கூட மனப்பாடம் செய்து எழுதும் நிலை உள்ளது.

இதை தடுக்க, கடந்த ஆண்டு வினாத்தாள் வடிவமைப்புக் குழு, கட்டாய விடையளிக்கும் பகுதியில் சொந்தமாக தயாரிக்கப்பட்ட வினாவை தேர்வின் போது கேட்டு இருந்தது.
ஆனால், தேர்வு நெருங்கும் வேளையில் அடிக்கடி பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருவதால் மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. எனினும், புத்தக வினாக்களையே கேட்பது ''சென்டம்'' பெறலாமே தவிர, மாணவனின் திறனை சோதிக்க உதவாது,'' என்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...