இன்றைய"SSTA-"ஸ்பெஷல்" -எறும்பு.


உலகில் உயிர்வாழும் பூச்சி இனங்களில் 10 இலட்சம் மேலான இன வகைகள் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது. இந்த பூச்சி வகைகள் அனைத்தும் 6 கால்களையும் மூன்று பகுதிகளில் அமைந்த உடல்
அமைப்பினை பொதுவாகவும் கொண்டுள்ளன. பூச்சிகளில் சிலவகை இறக்கை அமைப்பினையும் (செட்டை) வித்தியாசமான வாழ்க்கை கட்டமைப்பினையும் கொண்டுள்ளன. இந்த வகையில் மிகவும் ஒருங்கமைக்கப்பட்ட சமூக (social) அமைப்பினைக் கொண்ட எறும்புகளின் வாழ்வியல் கட்டமைப்பு வியந்து பேசப்படுகின்றது.
எறும்பு , தேனீ , குளவி , கறையான் என்பன மிகவும் திட்டமிடப்பட்ட சமூக அமைப்பில் இயங்குகின்ற போதிலும் எறும்புகள் கொண்டுள்ள அமைப்பு மிக விசேடமானது. எறும்பு குழுவாக வாழும் ஒரு பூச்சியினமாகும். இவை மிகவும் வியக்கவைக்கும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட சமூக வாழ்வைக் கொண்டிருப்பனவாகும். ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் அல்லது குழுவில் உள்ள எறும்புகள் தமக்கிடையே பரிமாறிக் கொள்ளும் வேதிப்பொருள் வழிப்பட்ட தொடர்பாடலானது (chemical communication) மிகவும் சிக்கலானதும் , இலகுவில் புரிந்து கொள்ளப்படாததாகவும் இருக்கிறது. எறும்புகள் உலகின் எல்லாப் பகுதிகளிலும் காணப்பட்டாலும் , இவற்றில் பெரும்பாலானவை வெப்ப வலயங்களிலேயே வாழ்கின்றன. எறும்புகளில் மட்டும் 10,000 மேலான இன வகைகளில் உயிர்வாழ்வது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகைகள் யாவும் ஒரே குடியிருப்பு கட்டமைப்பினையும் வித்தியாசமான உணவு , அளவு , நிறம் என்பவற்றினாலும் வேறுபடுகின்றன. மிகவும் கட்டுப்பாடுள்ள சமூகக் கட்டமைப்பினையும் சமூகவியலையும் போதிக்கும் எறுப்புக்கூட்டம் தொடர்பில் சில தகவல்கள் பின்வருமாறு.



  • எறும்பு கூட்ட குடியிருப்பில் (colony) ராணி (அரசி) , ஆண் எறும்பு , வேலையாள் (worker) , காவலாளி (soldier) எனும் நான்கு வகுப்புக்களை (சாதிகளை) கொண்டுள்ளது.
  • ராணி எறும்பும் ஆண் எறும்பும் இனப் பெருக்கத்திற்கும் , வேலையாட்கள் உணவு சேகரிப்பதுடன் கூடுகட்டுவதும் முக்கிய பொறுப்பு , காவலாளி எறும்பு அனைத்தினையும் பாதுகாப்பதாகவும் உள்ளது.
  • அதிகபட்சமாக ராணி எறும்பு 30 வருடம் வரையும் , வேலையாட்களும் காவலாளிகளும் 3 வருடம் வரையும் , ஆண் எறும்பு சிலமாதமும் உயிர்வாழ்கின்றன.( பூச்சி இனங்களில் மிகவும் அதிக காலம் உயிர்வாழக்கூடிய இனமாக ராணி எறும்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.)
  • ஒரு எறும்பு கூட்டத்தில் (கூட்டில் அல்லது புற்றில்) சில நூறு முதல் பல லட்சம் வரையிலான எறும்புகள் உயிவாழ்கின்றன.
  • ஒரு கூட்டத்திற்கு ஒன்றிற்கு மேற்பட்ட ராணிகளும் இருக்கும் அதேவேளையில் ராணி இல்லாது எறும்பு கூட்டம் இருப்பதும் இல்லை.
  • எறும்பு இனமானது மிகச் சிறியது முதல் 5 சென்றிமீற்றர் (2அங்குலம்) வரை உள்ளன.
  • 10,000 மேலான வகைகளில் உள்ள எறும்புகளின் உணவானது தானியம் , பங்கஸ் , தேன் என பல வகைகளில் அடங்கும்.
  • மிகவும் சிறந்த மேப்ப சக்தி (வாசனை நுகரும் சக்தி) , கண் பார்வை உடைய எறும்புகளுக்கு சவாசப்பைகள் இல்லை.(எறும்பின் மேல்பகுதியில் உள்ள சிறிய பலதுளைகள் மூலமாக ஒக்சியினை உடலில் உறிஞ்சுகின்றன.)
  • எறும்புகள் தமது உடல் எடையை விடவும் 50 மடங்கு சுமையினை சுமக்க வல்லன.
  • எறும்பு பற்றிய கற்றல் (ஆராட்சி) myrmecology என அழைக்கப்படுகின்றது.
  • எறும்பின் மூளையில் 250,000 கலங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
  • உலகின் மூன்றில் ஒரு பங்கு எறுப்புக்கூட்டம் அமேசன் காட்டினில் இருப்பதாக ஆராட்சிகள் குறிப்பிடுகின்ற்ன.
  • மிகவும் காத்திரமான சமூக அமைப்பினையும் பிராந்திய எல்லைகளையும் கொண்டுள்ள எறும்பு இனமானது வெப்பமானதும் ஈரப்பதன் உள்ளதுமான பகுதிகளில் பெருமளவில் கூட்டங்களை கொண்டுள்ளது.
  • குடியிருப்பு இடங்களாக நிலம் , மரம் , நிலத்தின் கீழ் என பல சிக்கல் நிறைந்த இயற்கையுடன் கூடிய வாழ்வியலை கொண்டுள்ள எறும்பு இனமானது மிகச்சிறந்த உயிர் தப்பி வாழும் (survival) உயிரினங்களில் முக்கியமானதகவும் உள்ளது.எறும்புகளின் மிகவும் ஒழுங்காக கட்டமைக்கப்பட்டிருக்கும் சமூக வாழ்வு , தமது வாழ்விடத்தை தமக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கும் இயல்பு , தம்மைத்தாமே பாதுகாத்துக் கொள்ளும் திறன் போன்றவையே எறும்புகளின் வெற்றிக்கான காரணங்களாக கருதப்படுகின்றன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...