இன்றைய SSTA ஸ்பெஷல் "இராட்சத வெண் சுறா "

  • முதிர்ந்த வெண் சுறா (Great White Shark) சராசரி நீளம் 4.6 மீற்றர் இலிருந்து 6 மீற்றர் வரை வேறுபட்ட அளவுகளிலும் எடை 5,000 இறாத்தல் (2,268 கிலோ) மேலாகவும் இருக்கின்றன.
  • வெண் சுறாக்கள் வெதுவெதுப்பான கடல் நீரில் ஒன்று தொடக்கம் 1280 மீற்றர் ஆழப்பகுதியில் சஞ்சாரம் செய்கின்றன.
  • இவை விரிந்து பரந்த விமையான வால்பகுதியின் துணையுடன் மணிக்கு 15 மைல் (24 கிலோ மீற்றர்) வேகமுடன் நீரில் பயணிக்க வல்லன.
  • இராட்சத வெண் சுறா பல வரிசைகளில் அமைந்த 3,000 பற்களை கொண்டன எனவும் முன் வரிசை பற்கள் சேதமடையும் வேளை பின் வரிசை பற்களை மாற்றீடு செய்யும் வல்லமை தாடைப் பகுதியில் செயற்படுகின்றதாம் (சுழற்சி முறையில் மாற்றீடு செய்யும் பொறிமுறை).
  • இரைகளை பெரிய துண்டுகளாக விழுங்கும் சுறா தனது உணவாக "கடல் சிங்கம்" (Seal) போன்ற பெரிய ஒன்று சிக்கும் வேளை அடுத்த ஒன்று அல்லது இரண்டு மாதம் உணவு ஒன்றும் சாப்பிடாது நெடுநாள் பசிகாக்குமாம்.
  • இராட்சத வெண் சுறாவின் மேல்பகுதி கறுப்பு அல்லது கடும்சாம்பல் நிறமும் கீழ்பகுதி வெள்ளையாகவும் இருக்கின்றது.
  • சுறாக்களின் நுகரும் (மோப்பம்) சக்தி அபாரமானது. இவற்றினால் ஒரு துளி இரத்தம் 100 லீற்றர் நீரில் கலந்த நிலையிலும் அடயாளம் காண வல்லனவாகவும் சிலதுளிகளை (இரத்தம்) 3 மைல்கள் (5 கிலோ மீற்றர்) தூரத்திலும் இருந்து அறியும் அபார உணர்வு கொண்டுள்ளன.
  • இராட்சத வெண்சுறா 2 அல்லது அதற்கு மேற்பட்ட குழுவாக மட்டும் நீரில் சஞ்சரிக்கின்றன.
  • பெண் சுறாக்கள் ஆண் இனத்தினைவிடவும் உருவத்தில் (நீளம்) பெரியனவாக இருக்கின்றன.
  • இராட்சத வெண்சுறாக்கள் தனது வழ்நாளில் தொடர்ந்து நீந்தியவண்ணம் இருக்கும் (இறக்கைகளை அசைத்த வண்ணம்) அல்லாது விட்டால் மூழ்கிவிடும்.
  • உலகிலுள்ள 600 வகை சுறா இனங்களில் இராட்சத வெண்சுறாவும் ஒன்று.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...