10ம் வகுப்பு செய்முறைத் தேர்வு ஆசிரியர்களுக்கு உழைப்பூதியம் : அரசுத்தேர்வுத்துறை உத்தரவு

பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு புறத்தேர்வாளர்களாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு உழைப்பூதியம் வழங்க, அரசுத்தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு நடத்தி, 25 மதிப்பெண் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு முதல்
நடைமுறைக்கு வந்த நிலையில், செய்முறை தேர்வில் புறத்தேர்வாளர்களாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு,இது வரை உழைப்பூதியம் வழங்கப்படவில்லை. இதனிடையே,இந்தாண்டு பத்தாம் வகுப்பு செய்முறைத்தேர்வு, பிப்., 20 முதல் 28 ம் தேதி வரை நடத்தப்பட்டது. புறத்தேர்வாளர்களுக்கு ஒரு விடைத்தாள் திருத்த 3 ரூபாய் வீதம் உழைப்பூதியம் வழங்க, அரசுத்தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்தாண்டுக்கான உழைப்பூதியமும் வழங்கவும், ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...