10ம் வகுப்பு புதிய கணித வினா அமைப்பு குறித்து மாணவர்களிடம் விளக்க மாக தெரிவிக்கும்படி பள்ளிகளுக்கு கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

10ம் வகுப்பு பொதுத் தேர்வு வருகிற 27ம் தேதி தொடங்குகிறது. இந்த ஆண்டு கணித வினாக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள் ளன. இதுகுறித்து பள்ளி களுக்கு அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை வராமல் இருந்ததால் வினாத்தாள் எப்படி இருக்கும் என்ற குழப்பம் மற்றும் அச்சம் மாணவர்கள் மத்தியில் இருந்தது. இதை தவிர்ப் பதற்காக அனைத்து பள்ளிகளுக்கும் புதிய மாற்றம் குறித்து சுற்ற றிக்கை அனுப்பப் பட்டுள்ளது.
புதிய வினாத் திட்டப் படி ஏ பிரிவில் கேட்கப் படும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும் 15 வினாக் கள் புத்தகத்தில் எடுத்துக் காட்டு வினா மற்றும் புத்தக வினாவில் இருந்தே கேட்கப்படும். இதுபோல் பி பிரிவில் 2 மதிப்பெண் வினாவில் கிரியேட்டிவ் வினாவாகவும், கட்டாய வினாவாக இருந்த 30வது வினா இப்போது புத்தகத்தில் உள்ள வினாவாக மாற்றப் பட் டுள்ளது. இதற்கு பதில் வினா எண் 16 முதல் 29 வரை உள்ள இரு மதிப்பெண் வினாக்களில் 2 வினாக்கள் கிரியேட்டிவ் வினாவாக கேட்கப்படும்.
சி பிரிவில் கட்டாய கிரியேட்டிவ் வினாவாக இருந்த கேள்வி எண் 45 இனி புத்தகத்தில் இருந்து கேட்கப்படும். அதற்குப் பதில் 31 முதல் 44 வரை உள்ள வினாக்களில் 2 வினாக்கள் கியேட்டிவ் வினாவாக கேட்கப்படும்.
கடந்த ஆண்டு மெய்யெண்கள், இயற் கணிதம், ஆயத்தொலை வுகள், அளவியல் பாடங் களில் இருந்து மட்டுமே கிரியேட்டிவ் வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. இப்போது அனைத்துப் பாடங்களில் இருந்தும் கிரியேட்டிவ் வினாக்கள் கேட்கப்படும். ஆசிரியர் கள் மற்றும் மாணவர் களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த விளக்கங்கள் கல்வித் துறையால் அளிக்கப் பட்டுள்ளன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...