டெட்டால் பாட்டிலில் பூச்சி ரூ.10 ஆயிரம் இழப்பீடு தர மெடிக்கல் ஷாப்புக்கு உத்தரவு


டெட்டால் பாட்டிலில் பூச்சி இறந்து கிடந்ததால், வாங்கிய வாடிக்கையாள ருக்கு அதன் தயாரிப்பு நிறுவனமும், விற்பனை செய்த மெடிக்கல் ஷாப்பும் இணைந்து 10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.டெல்லி வடக்கு
மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், பாண்டே என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘மெடிக்கல் ஷாப் ஒன்றில் 500 மிலி டெட்டால் ஆன்டிசெப்டிக் திரவம் வாங்கினேன். அதற்காக ஸீ74 செலுத்தினேன். வீட்டுக்கு வந்து பார்த்தபோது, அந்த பாட்டிலுக்குள் ஒரு பூச்சி ஒன்று இறந்து கிடந்தது. எனவே அது உபயோகத்திற்கு ஏற்றதல்ல என்பதால், உடனடியாக மருந்து கடைக்காரரிடம் புகார் கூறினேன். அவர் கண்டுகொள்ளவில்லை. அதையடுத்து டெட்டால் தயாரிப்பு நிறுவனமான ரெக்கிட் பென்கிசர் நிறுவனத்தின் புகார் மையத்திற்கு இமெயில் மூலம் புகார் அனுப்பினேன். அங்கிருந்தும் எந்த தகவலும் இல்லை. தரத்தில் குறைபாடு உள்ள பொருளை தயாரித்த நிறுவனம் மீதும், காசு கொடுத்து வாங்கும் வாடிக்கையாள ருக்கு உரிய பொருளை தராத மருந்து கடைக்காரர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி பாபுலால், ரெக்கிட் பென்கிசர் நிறுவனம் மற்றும் மெடிக்கல் ஷாப் ஆகியவற்றை பதில் மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார். ஆனால், ரெக்கிட் நிறுவனம் பதில் அனுப்பவில்லை. மருந்து கடை அதிபர் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘நல்ல பொருளா என்று பார்த்து வாங்காதது வாடிக்கையாளரின் தவறு. பாட்டிலுக்குள் பூச்சி கிடக்கிறதா இல்லையா என்று பார்த்து விற்பனைக்கு அனுப்ப வேண்டியது தயாரிப்பு நிறுவனத்தின் வேலை. இரண்டையும் விட்டு விட்டு, விற்ற எங்களை குற்றம் சாட்டுவது சட்டப்படி தப்பு’ என்று கூறப்பட்டிருந்தது.ஆனால், இந்த வாதத்தை ஏற்க நீதிபதி மறுத்து விட்டார். அவர் பிறப்பித்த உத்தரவில், ‘தரமான பொருளை மட்டுமே தயாரித்து, சந்தைக்கு அனுப்ப வேண்டும் என்ற விதியை மீறிய நிறுவனமும், தரக்குறைபாடு உள்ள ஒரு பொருளை விற்பனை செய்த கடைக்காரரும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி சேவையில் குறை புரிந்தவர்கள் ஆகின்றனர். எனவே இவர்கள் இருவரும்தான் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு இழப்பீடு தர வேண்டியவர்கள். இருவரும் இணைந்து சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு 10 ஆயிரம் இழப்பீடு தர வேண்டும். டெட்டால் பாட்டிலுக் காக விலை 74ஐயும் திருப்பி கொடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...