12 வயதில் குழந்தைப் பருவம் முடிந்துவிடுகிறது: ஆய்வுகள்

வளர் இளம் பருவத்தை எட்டுவதற்குள் தங்கள் குழந்தைகளின் குழந்தைப் பருவம் முடிந்துவிடுவதாக மூன்றில் இரண்டு பங்கு பெற்றோர்கள் ஒரு ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளனர்.
அந்த ஆய்வு முடிவில், குழந்தைகள் தங்கள் பாலினம், பாலியல்,
தங்களின் பிரபலத்தன்மை குறித்து அதிக கவலை கொள்வதாகவும், 12 வயதுக்குள் குழந்தைத் தனத்தை இழந்து விடுவதாகவும் மிரர் செய்தியில் தெரிவித்துள்ளது.
10வயதில் தங்கள் வாரிசுகள் குழந்தைத்தனத்தை இழந்துவிடுவதாக 16 சதவீத பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு இணையதளங்கள், பிரபலங்கள் ஆகியோர் காரணம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
பெற்றோர்க்கான இணையதளமான நெட்மம்ஸ், இதுகுறித்த ஆய்வு முடிவுகளில், 25 சத பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் பால பருவத்தைக் கடக்கும் முன்னரே, மன ரீதியான முதிர்ச்சி அடையும் முன்னரே பாலியல் உறவுகளில் ஆர்வத்தைக் காட்டுகின்றனர் எனத் தெரிவித்துள்ளனர் - என்று கூறியுள்ளது.
இந்தப் போக்குக்கு சமூக வலைத்தளங்களும் காரணம் என்று கூறப்படுகிறது. 7 முதல் 13 வயதுக்குட்பட்ட சிறுமிகள், தங்களுக்கு எத்தனை நண்பர்கள் ஃபேஸ்புக்கில் உள்ளனர் என்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
பாதியளவுக்கும் மேற்பட்ட பெற்றோர், தங்கள் குழந்தைகள் அந்த வயதில் உடல் குறித்த அக்கறையும் அதன் காரணமாக அதிக மன அழுத்தமும் அடைவதாகத் தெரிவித்துள்ளனர்.
பாதிப்பேர் தங்கள் மகன்கள் அந்தச் சிறுவயதில், உடல் குறித்த தோற்றத்தை பெரிய விஷயமாகக் கருதுகின்றனர் என்றும், மற்றவரைக் காட்டிலும் தோற்றத்தில் சிறப்பாகத் திகழ்கிறோமா என்று கவனம் செலுத்துவதாகவும் கூறியுள்ளனர்.
நெட்மம்ஸ் தளத்தின் இணை நிறுவனர் சியோபான் ப்ரீஹார்ட் இதுகுறித்துக் கூறுகையில், "12 வயதுக்குள் பாலபருவம் முடிவடைந்துவிடுவது என்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கும் செய்தி. நவீன வாழ்க்கையானது குழந்தைத்தனத்தையும் குறும்புத்தனத்தையும் அவர்களின் வாழ்க்கையில் இருந்து விரைவிலேயே விழுங்கி விடுவது பெருத்த ஏமாற்றம். கவலை ஏதும் இன்றி விளையாடி மன அழுத்தம் ஏதும் இன்றித் திகழும் வயதில் தங்களைப் பற்றியும், தங்களின் பிரபலத்தன்மை குறித்தும் அதிக கவலை கொள்வது நவீன வாழ்க்கை முறையில் ஒரு அங்கமாகிவிட்டது” என்கிறார் வருத்தத்துடன்!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...