ஆன்-லைனில் பெறுவதற்காக 14 துறைகளின் விண்ணப்பங்கள் மறு வடிவமைப்பு


ஆன்-லைன் மூலம், பொதுமக்கள் சேவைகளைப் பெறும் வகையில், 14 துறைகளின் விண்ணப்பங்களை, மறு வடிவமைப்பு செய்ய, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசுத் துறையின் சேவை முழுவதையும், ஆன்-லைன் மூலம் கொண்டு வர, இப்பணியை விரைந்து முடிக்க
வேண்டும் என, தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்திஉள்ளது. அரசு அலுவலகங்களின் அன்றாடப் பணிகள் உள்ளிட்ட அனைத்தையும், கணினி வழியில் செய்வதற்கான நடவடிக்கைகளை, அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக, மாநில டேட்டா மையம், மாநில அளவிலான நெட்வொர்க், மாநில அரசின் இணையதளம் ஆகியன, துவங்கப்பட்டு உள்ளன. இவை அனைத்திலும், துறைவாரியான அறிவிப்புகள், அரசாணைகள், நிர்வாக முறை, கொள்கை விளக்க குறிப்புகள், பதிவு செய்யப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக, அரசு துறைகள் அளிக்கும் சேவைகளை, கணினிமயப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக, அரசின் விண்ணப்பங்களை, ஆன்-லைனில் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், தமிழக அரசின் முக்கியமான, 14 துறைகளின், விண்ணப்பங்களை ஆன்-லைனில் பெறவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. அரசு துறைகளின் தற்போதுள்ள விண்ணப்பங்கள், ஆன்-லைனில் பெறுவதற்கேற்ற முறையில் இல்லை. எனவே, இவற்றை மறுவடிவமைப்பு செய்து, ஆன்-லைனில் பெறுவதற்கு ஏற்ப, மென்பொருள்களை வடிவமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உதவிகளை, மாநில டேட்டா மையம், துறைகளுக்கு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் வேளாண்மை, பொது வினியோகம், வணிக வரி, கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், தொழில், நகராட்சி நிர்வாகம், காவல், பதிவுத் துறை, வருவாய், சமூகநலம், போக்குவரத்து, கருவூலத் துறை ஆகியவற்றின் விண்ணப்பங்கள் அனைத்தும், ஆன்-லைனில் கிடைக்கும் வகையில், மறு வடிவமைப்பு செய்யப்படுகின்றன.
ஒவ்வொரு துறையும், விண்ணப்பங்களை தயார் செய்ய வைத்துள்ள தனித் தனி மென்பொருள்களை ஒன்றிணைத்து, பொது மென்பொருளில் தயார் செய்யவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளன. இதற்காக, ஒவ்வொரு துறையும், தன் வசமுள்ள தகவல்களை, பரிமாறிக் கொள்ள வேண்டும் என, தகவல் தொழில் நுட்பத் துறை அறிவுறுத்திஉள்ளது.

இதுகுறித்து, தவகல் தொழில்நுட்பத் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாநிலம், மாவட்டம், வட்டம் மற்றும் ஒன்றிய அளவில், அரசு அலுவலகங்களை, கணினி மயமாக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு துறைகளை ஆன்-லைனில் இணைக்க, தகவல் தொழில் நுட்பத் துறை உதவிகளைச் செய்யும். ஒருங்கிணைந்த செயல்பாட்டுகாக, மாநில அரசின் இணையதளம், மாநில சேவை மையங்களை, அரசுத் துறைகள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். ஆன்-லைன் சேவைகளை மக்களுக்கு அளிக்கும் வகையில், மாவட்டம், வட்டம், ஒன்றிய அளவிலும், கூட்டுறவு வங்கிகளிலும் தனி கவுன்டர்களை திறக்க வேண்டும். மறு வடிவமைப்பு செய்து, ஆன்-லைனின் பதிவேற்றம் செய்யும் விண்ணப்பங்களை, பராமரிக்கும் பணியை, தேசிய தகவல் மையம் மேற்கொள்ளும். இவ்வாறு, அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...