விண்ணப்பிக்க ஏப்.16 கடைசி நாள் ஜூலை 28ம் தேதி மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு


டெல்லியில் உள்ள மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 2013ம் ஆண்டுக்கான மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த உள்ளது. மத்திய அரசு பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவ மாணவியருக்கு பாடம் நடத்த ஆசிரியர்கள் இந்தத் தகுதி தேர்வு எழுதி
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்காக விண்ணப்பிக்க வரும் ஏப்ரல் 16ம் தேதி கடைசி நாள் ஆகும். எழுத்துத் தேர்வு ஜூலை மாதம் 28ம் தேதி நடக்கிறது. அன்று காலை 10.30 மணி முதல் 12 மணி வரை முதல்தாள் தேர்வு ஒன்றரை மணி நேரம் நடைபெறும். 2ம் தாள் தேர்வு அன்று பிற்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை ஒன்றரை மணி நேரம் நடைபெறுகிறது.மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மத்திய அரசு பள்ளிகளான கேவிஎஸ், என்விஎஸ், டைபீட்டன் பள்ளிக ளில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் மாநில அரசுகளும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை ஆசிரியர் பணிக்கு பரிசீலிக்கலாம் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...