162 பி.எட்., கல்லூரிகள் துவக்க விண்ணப்பங்கள் : துணைவேந்தர் தகவல்

""தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில், 162 பி.எட்., கல்லூரிகள் துவக்க, விண்ணப்பங்கள் வந்துள்ளன,'' என, தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலை துணைவேந்தர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறியதாவது: பல்கலைக்கு சொந்த கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆசிரியர் தகுதி தேர்வு காரணமாக

இந்தாண்டு 650 பி.எட்., கல்லூரிகளிலும், செய்முறை தேர்வுகள் முன்கூட்டியே (பிப்.,யில்) நடத்தப்பட்டன. பி.எட்., கல்லூரிகள் தரமான கல்வி அளிக்க, அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. ஆசிரியர் தகுதி தேர்வை (டி.இ.டி.,), பி.எட்., மாணவர்கள் எதிர்கொள்ள, இந்தாண்டு முதல் அனைத்து பி.எட்., கல்லூரிகளிலும், ஆசிரியர் திறன் மேம்பாடு தொடர்பான புதிய படிப்பு, அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், டி.இ.டி., தேர்வில் இடம்பெற்றுள்ள பாடங்கள் உள்ளதால், வரும் டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும். 30 நாட்கள் கெடு: அடிப்படை வசதிகள் இல்லாததால், திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களில், தலா ஒரு கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதிக கட்டணம், அடிப்படை வசதிகள் இல்லாதது போன்ற புகார்கள் அடிப்படையில், கடந்தாண்டு 42 பி.எட்., கல்லூரிகளுக்கு "நோட்டீஸ்' அனுப்பப்பட்டன. வரும் 30 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். இக்கல்வியாண்டில், தமிழகத்தில் 162 பி.எட்., கல்லூரிகள் துவக்க, இதுவரை விண்ணப்பங்கள் வந்துள்ளன. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தில் 240 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன. பல்கலை மானிய குழு விதிப்படி, அங்கீகாரம் வழங்கப்படும். பல்கலையில் தொலை நிலை படிப்புகள் துவங்க, நடவடிக்கை எடுக்கப்படுகிறது, என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...