சிறார் வயது வரம்பு சட்டத்தில் திருத்தம் 18லிருந்து 16 ஆகக் குறைக்க ஒப்புதல்

சிறார் வயது வரம்பை, 18லிருந்து, 16 ஆக குறைக்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு, மத்திய அமைச்சர்கள் குழு, நேற்று ஒப்புதல் அளித்தது. பெண்களை பின் தொடருவது உள்ளிட்ட குற்றங்களை, ஜாமினில் வெளியில் வர முடியாத குற்றங்களாக கருதவும், ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதை அடுத்து, இது போன்ற குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு, கடுமையான தண்டனை வழங்கவும், பெண்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கவும், குற்றவியல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள, மத்திய அரசு முடிவு செய்தது.
இந்த சட்ட திருத்த மசோதா குறித்து, நேற்று முன்தினம் நடந்த, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது, சிறார் வயது வரம்பு குறைப்பு உள்ளிட்ட, மசோதாவில் உள்ள, சில விதிமுறைகளுக்கு, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சகம் சார்பில், எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால், இந்த மசோதா குறித்த விஷயத்தில், மத்திய அமைச்சகங்களுக்கு இடையே, ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இதையடுத்து, இந்த சட்ட திருத்த மசோதா, மத்திய அமைச்சரவை குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில், நிதி அமைச்சர் சிதம்பரம் தலைமையிலான, அமைச்சரவை
குழு, இதுகுறித்து நேற்று விவாதித்தது.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: நேற்று நடந்த, மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில், சிறார் வயது வரம்பை, 18லிருந்து, 16 ஆக குறைக்கும் கருத்துக்கு, ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், பெண்களை பின் தொடருவது, மற்றவர்கள் பாலியல் உறவில்

ஈடுபவதை மறைந்து நின்று, வெறித்துப் பார்ப்பது ஆகிய குற்றங்களை, ஜாமினில் வெளியில் வர முடியாத குற்றங்களாக கருதவும், ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தவறான புகார்களுக்கு, தண்டனைகள் வழங்கப்பட மாட்டாது என்றும், முடிவெடுக்கப்பட்டுள்ளது. மசோதாவில் உள்ள, சில வார்த்தைகளுக்கு ஆட்சேபம் எழுந்ததை அடுத்து, அந்த வார்த்தைகள் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக, வேறு வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து, மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர், கபில் சிபல் கூறியதாவது: பெண்களுக்கு எதிரான, குற்றங்களுக்கான தண்டனையை கடுமையாக்குவது குறித்த, சட்ட திருத்த மசோதாவுக்கு, சில திருத்தங்களுடன், மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில், ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது.
இதை, மத்திய அமைச்சரவை, இன்று பரிசீலிக்கும். அதைத் தொடர்ந்து, 18ம் தேதி, அனைத்து கட்சி கூட்டத்தில், இந்த மசோதா குறித்து, விவாதிக்கப்படும். இதன் பின், பார்லிமென்ட்டில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும்.
இவ்வாறு, கபில் சிபல் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...