பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் 22ம் தேதி முதல் துவக்கம்


தமிழகம் முழுவதும், பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வரும், 22ம் தேதி துவங்குகிறது.தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த, 21ம் தேதி துவங்கியது. வரும், 27ம் தேதியுடன் பிளஸ் 2 பொதுத்
தேர்வு நிறைவடைகிறது. தமிழகத்தில், 7 லட்சத்து, 91 ஆயிரத்து, 924 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வெழுதுகின்றனர். இதற்காக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 2,020 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.தேர்வுகள் அனைத்தும், 27ம் தேதி முடிவடையும் நிலையில், விடைத்தாள் திருத்தும் பணி வரும், 22ம் தேதி முதல் துவங்கவிருப்பதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதற்கட்டமாக, 15 மையங்களில், விடைத்தாள்களுக்கு மாற்று எண் (டம்மி) வழங்கும் பணி நடக்கிறது. அதைத் தொடர்ந்து, 20 மையங்களில், 28ம் தேதி முதல், விடைத்தாள் திருத்தும் பணி துவங்குகிறது. ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரிய, ஆசிரியைகள், விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...