விபத்தில் சிக்கினாலும் மன உறுதி குன்றவில்லை : நம்பிக்கையை விதைத்த பிளஸ் 2 மாணவர்

விபத்தில் சிக்கி, உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும், மனஉறுதியுடன் பிளஸ் 2 தேர்வு எழுதினார், தேனி மாணவர் தனசேகரன். தேனி அருகே முத்துதேவன்பட்டியை சேர்ந்த இவர், மேலப்பேட்டை
இந்து நாடார் மெட்ரிக் பள்ளியில் படிக்கிறார். நேற்று முன்தினம் காலை, நண்பர்களுடன் அங்குள்ள கண்மாய் கரைக்கு சென்றார். அறுந்து கிடந்த மின் ஒயரை மிதித்ததால், மின்சாரம் பாய்ந்து செயல் இழந்தவரை, நண்பர்கள் காப்பாற்றினர். தனசேகரனுக்கு உடல் முழுவதும் காயம் ஏற்பட்டு கை, கால்கள் செயல் இழந்தன. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனசேகரன், "பிளஸ் 2 தேர்வை எழுத முடியாது' என, டாக்டர்கள் கை விரித்தனர். தேர்வு எழுத வேண்டும், என்ற உறுதியுடன் தனசேகரன் இருந்தார். உடல் நிலைமையை விளக்கி, அவர் தேர்வு எழுத சிறப்பு அனுமதி பெறப்பட்டது. தனசேகரன் தேர்வு எழுத தனி அறை ஒதுக்கப்பட்டு, ஆசிரியர் நியமிக்கப்பட்டார். நேற்று காலை, அவரை தேர்வறைக்கு அழைத்துச் சென்றனர். பேசக்கூட முடியாத நிலையில் இருந்த தனசேகரன், சிரமப்பட்டு பதில் சொல்ல, ஆசிரியர் மகேஸ்வரன் தேர்வு எழுதினார். தேர்வு எழுதி முடித்த பின், அவர் கூறுகையில், ""சிகிச்சை பெற்றுக்கொண்டே அனைத்து தேர்வுகளையும் எழுத முடியும்,'' என, மன உறுதியுடன் தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...