பிளஸ் 2 தேர்வு: மாவட்டக் கல்வி அலுவலர் ஆய்வு

பிளஸ் 2 இயற்பியல் தேர்வை ஆர்.கே.பேட்டை அரசு ஆண்கள் மேனிலை பள்ளியில் மாவட்டக் கல்வி அலுவலர் சீமான் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகம் முழுவதும் கடந்த 1-ம் தேதி பிளஸ் 2 தேர்வு
தொடங்கியது. இத்தேர்வுகள் வரும் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்வுகளில் முறைகேடுகள் நடக்காமல் இருக்க மாவட்ட ஆட்சியர் கோ.வீரராகவராவ் தலைமையிலும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாகராஜ் முருகன் மேற்பார்வையில் தேர்வுகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திங்கள்கிழமை பிளஸ் 2 மாணவர்களுக்கு இயற்பியல், பொருளியல் தேர்வுகள் நடைபெற்றன. இதை மாவட்டக் கல்வி அலுவலர் சீமான் ஆர்.கே.பேட்டை ஆண்கள் மேனிலை பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து விடியங்காடு, அம்மையார்குப்பம், ஆர்.கே.பேட்டை, அத்திமஞ்சேரிப்பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய பள்ளிகளிலும் பறக்கும் படையினருடன் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது கேள்வித்தாள்கள் அனைத்தும் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுள்ளதா என்றும், பள்ளிகளில் மாணவர்கள் காப்பி அடிக்காமல் தேர்வை எழுதுகிறார்களா என்றும் துறை அலுவலரிடம் கேட்டறிந்தார். தேர்வுகள் குறித்து புகார் ஏதேனும் வந்தால் சம்மந்தப்பட்ட முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர், ஆசிரியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
திங்கள்கிழமை நடைபெற்ற இயற்பியல், பொருளியல் தேர்வில் வினாக்கள் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...