பிளஸ் 2 தேர்வு பணியில் பட்டதாரி ஆசிரியர்கள்

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு பணிகளில், மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் பற்றாக்குறையால், உயர்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிகள் வழங்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், 1974 தேர்வு மையங்களில், 7 லட்சத்து 41,663 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இந்தாண்டு 2020 மையங்களில் 8 லட்சத்து 4,538
மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். ஆனால், மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் எண்ணிக்கை இதற்கு தகுந்தாற் போல் இல்லாததால் தேர்வு பணிகளில் ஈடுபடுத்த, இந்தாண்டு ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை சரிகட்ட, பல மாவட்டங்களில் உயர்நிலை பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு பணிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதனால், மார்ச் 27ல் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு, பட்டதாரி ஆசிரியர்களால் பாடங்கள் நடந்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க பொது செயலாளர் சாமிசத்தியமூர்த்தி கூறியதாவது: ஆண்டுதோறும் பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றன. ஆனால், மேல்நிலை பள்ளிகளில் ஆசிரியர்கள் காலிபணியிடங்கள், அதற்கு ஏற்ப நிரப்பப்படவில்லை. இதனால், இந்தாண்டு ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மெட்ரிக் பள்ளி மாணவர்கள், அதிக எண்ணிக்கையில் தேர்வு எழுதுவதும் ஒரு காரணம். நாகபட்டினம், புதுக்கோட்டை, சேலம் உட்பட பல மாவட்டங்களில் பிளஸ் 2 தேர்வு பணிகளில் பட்டதாரி ஆசிரியர்களை ஈடுபடுத்துகின்றனர். இதனால், பத்தாம் வகுப்பு மாணவர்கள் பாதிக்கப்படுவர், என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...