மாணவிகள், ஆசிரியர்கள் ஓட்டம் பிளஸ் 2 பரீட்சை அறைக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு


தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளையில் மேரி ஆன் பெஸ்ட் பெண்கள் மேல்நிலையில் நேற்று முன்தினம் பிளஸ் 2 இறுதி தேர்வான கணினி அறிவியல் தேர்வு நடந்தது. 3 அறைகளில் 56
மாணவிகள் தேர்வு எழுதி கொண்டிருந்தனர். ஆடிட்டோரியத்தில் மட்டும் 36 மாணவிகள் தேர்வு எழுதி கொண்டிருந்தனர். அப்போது பகல் 12.10 மணி அளவில் ஆடிட்டோரியத்திற்குள் திடீரென பாம்பு ஒன்று புகுந்தது. தேர்வு எழுதி கொண்டிருந்த மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பாம்பை கண்டு அலறியடித்து கொண்டு அறையிலிருந்து வெளியில் ஓட்டம் பிடித்தனர். தலைமை ஆசிரியர் லீலா சந்திரபாய் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரரும் பாம்பை அடிக்க முயன்றனர். ஆனால் பாம்பு அருகில் இருந்த ஆய்வு கூடத்தில் புகுந்து மறைந்தது. பயத்தில் மாணவிகள் பாம்பு புகுந்த தேர்வு அறைக்குள் தேர்வு எழுத மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து அருகில் இருந்த வகுப்பறை தேர்வு அறையாக மாற்றப்பட்டு, அதில் மாணவிகள் தேர்வு எழுதினர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...