பிளஸ் 2 வினாத்தாளில் வரிசை எண்

பிளஸ் 2 பொதுத் தேர்வு வினாத்தாளில், முதன் முறையாக "வரிசை எண்கள்' குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கமாக, வினாத்தாள் முதல் பக்கத்தில், மாணவர்களுக்கான

விதிமுறைகள், மேற்பகுதி வலதுபுறத்தில் வினாத்தாள் குறியீடு எண், மாணவர்களின் பதிவு எண்கள் (கட்டங்கள் வடிவில்) குறிப்பிடப்பட்டிருக்கும்.
ஆனால், இந்தாண்டு முதல் ஒவ்வொரு வினாத்தாள்களிலும் மாணவர்களின் தேர்வு எண்களுக்கு கீழ், சிவப்பு கலரில், 7 "டிஜிட்'கள் கொண்ட வரிசை எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களுக்கு அனுப்பப்பட்ட ஒவ்வொரு "கவர்'களிலுள்ள (100 வினாத்தாள் கொண்டவை) துவக்க எண், முடிவு எண்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. தேர்வு கண்காணிப்பாளர் ஒருவர் கூறியதாவது: தேர்வு மையங்களுக்கு, கவர்களில் மொத்தமாக அனுப்பி வைக்கப்படும், வினாத்தாள் எண்ணிக்கையில், சில நேரங்களில் குறைவு ஏற்படும். அதனை தடுக்க வரிசை எண் தரும் முறை உதவும். வினாத்தாள் திருடப்பட்டு, பிரதிகள் எங்கு வெளியானாலும் இந்த எண்களை வைத்து, முறைகேட்டை கண்டுபிடிக்கலாம், என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...