குழந்தைகள் கல்வியை வலியுறுத்தி 54 நாள்களில் பைக்கில் 19,000 கி.மீ. பயணம்

பெண் குழந்தை மற்றும் குழந்தைகள் கல்வியை வலியுறுத்தி கின்னஸ் சாதனை முயற்சியாக ஒடிசா மாநிலம் புரியை சேர்ந்த தம்பதி 54 நாள்களில் 19,000 கி.மீ. விழிப்புணர்வு பயணத்தை பைக்கில்
மேற்கொண்டுள்ளனர். அவர்களுக்கு ராணிப்பேட்டை ரோட்டரி சங்கத்தினர் புதன்கிழமை சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
 புதுதில்லியில் அரசு போக்குவரத்துத் துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் துர்கா சந்திரா மிஸ்ரா (60). இவரது மனைவி ஜேட்ஸ்னா மிஸ்ரா (51). இவர்கள் தற்போது ஒடிசா மாநிலம் புரியில் வசித்து வருகின்றனர்.  இத்தம்பதி, பெண் குழந்தை மற்றும் குழந்தைகள் கல்வியை வலியுறுத்தி கின்னஸ் சாதனை முயற்சியாக, ஒடிசா மாநிலம் புரியில் இருந்து 54 நாள்களில் 19 ஆயிரம் கிலோ மீட்டர் விழிப்புணர்வு பைக் பயணத்தை, கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி பூரி ஜெகந்நாதர் கோயிலில் தொடங்கினர்.
இதைத்தொடர்ந்து கர்நாடகம், ஆந்திரம் வழியாக  ராணிப்பேட்டைக்கு புதன்கிழமை காலை வந்தனர். இவர்களுக்கு ராணிப்பேட்டை ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் பாலசுந்தரம், நிர்வாகிகள் ஜெகந்தாதன், முருகன், சுந்தரமூர்த்தி ஆகியோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து இத்தம்பதி வாலாஜாபேட்டை வழியாக காஞ்சிபுரம், சென்னை என பயணத்தைத் தொடர்ந்து கன்னியாகுமரி, காஷ்மீர் வரை சென்று அங்கிருந்து புரியில் ஏப்ரல் 21ஆம் தேதி பயணத்தை நிறைவு செய்ய உள்ளனர். 
 இந்த பைக் பயணத்தை கின்னஸ் குழுவினர் லண்டனில் இருந்து ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணித்து வருகின்றனர்.
இதற்கு முன் மும்பையைச் சேர்ந்த மொஷீன் ஹக், உள்நாட்டுக்குள் 56 நாள்களில் 18,301 கி.மீ. தூரத்தை கடந்தது தற்போதைய கின்னஸ் சாதனையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...