7 கல்வி மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு சேலத்தில் விளையாட்டு போட்டி

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு அரங்கில், ஏழு கல்வி மாவட்டங்களுக்கு உட்பட்ட பள்ளி மாணவ, மாணவியருக்கான விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தது.
உலக திறனாய்வு திட்டம் சார்பில், நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில்

பள்ளி மாணவ, மாணவியரின் திறனை கண்டறியும் வகையில் சேலம், கரூர், சங்ககிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட, ஏழு கல்வி மாவட்ட மாணவர்கள் பங்கேற்றனர். ஆறாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை படிக்கும், 450க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகளில் நடைபெற்றது.
இதில், வெற்றி பெற்று முதல், 10 இடங்களுக்குள் வந்த மாணவ, மாணவியருக்கு, ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. இத்தகவலை, சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலர் நஞ்சப்பன் தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...