"+92' எண்களுடன் துவங்கும் அழைப்புகளுக்கு பதில் கூறாதீர்!

தெரியாத எண்ணில் இருந்து, "மிஸ்டு கால்' வந்தாலோ, அந்த எண், 12 இலக்க எண்ணாக இருந்தாலோ, அதைத் தவிர்ப்பது நல்லது. இல்லாவிட்டால், அழைப்புகளுக்காக, முன்கூட்டியே கட்டும் கட்டணம், காலியாகி விடும்."மிஸ்டு கால்'பீகார் மாநிலம், அனந்தபுரியைச் சேர்ந்த
ரமாசங்கர் என்ற பெண்ணுக்கு, கடந்த வெள்ளி மதியம், 12:00 மணியளவில், ஒரு, "மிஸ்டு கால்' வந்தது. 12 இலக்கங்களைக் கொண்ட அந்த எண், பரிச்சயமானதாகத்தோன்றியதால், அந்த எண்ணைத் தொடர்பு கொண்டார். மறுமுனையில் பேசிய நபர், ஒரு பிரபல நிறுவனத்தின் பெயரைக் கூறி, "இந்த நிறுவனத்தின் இலவச திட்டத்திற்கு, உங்களுடைய தொலைபேசி எண் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. அதில் நீங்கள், 25 லட்சம் ரூபாய்வென்றுள்ளீர்கள்' என்று கூறினார். இந்த உரையாடலுக்குப் பின், ரமா சங்கரின் மொபைல்போன்கட்டணக் கணக்கில், 40 ரூபாய் குறைந்திருந்தது.

அதிர்ச்சியடைந்து, விசாரித்தபோது, அது, போலியான தொலைபேசி அழைப்பு என்று தெரிந்தது. இவ்வாறான, 12 இலக்கஎண்கள் வழியே தொடர்பு கொண்டு, வாடிக்கையாளர்களின் இருப்புத் தொகையில் பெரும்பகுதியை அபகரிக்கும் மோசடிக் கும்பலுக்கு, இந்தியர்கள் தான் இலக்கு. இந்தியாவின் சர்வதேச எண், "+91' ஆகும். ஆனால், இது போன்று வரும் எண்கள், "+92' என்று துவங்கும்.இரவில் வரும்இந்த அழைப்புகள், பெரும்பாலும், இரவு அல்லது அதிகாலையில் தான் வருகின்றன. அச்சமயத்தில் அழைப்பது யாராக இருக்கும் என்ற ஆவலில், அந்த எண்ணைத் தொடர்பு கொள்ளும்போது, இருப்புத் தொகை வெகுவாக குறைந்துவிடும்.தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தால், எந்த நேரத்தில் வருகிறது என்றும், அந்த எண், "+92'ல் துவங்குகிறதா என்றும் கவனிக்க வேண்டும். பின், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம், அந்த எண் யாருடையது என, விசாரிக்க வேண்டும். யாருடைய எண்ணும் அல்ல என்பது தெரிந்தால், அந்த எண்ணின், 10 இலக்கங்களுடன், "0' என்று சேர்த்து தொடர்பு கொண்டால், சர்வதேச எண் என்றால், தொடர்பு கிடைக்கும். மோசடி எண் என்றால், தொடர்பு கிடைக்காது. "ரீ-டயல்' செய்யாமல்இருப்பதன் மூலம், மோசடியைத் தடுக்கலாம்.எச்சரிக்கை"பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்களிடம் இருந்து, இது போன்ற மோசடி புகார்கள், அதிகளவில் வந்துள்ளன. 16 இலக்க எண்களில் இருந்தும், இவ்வாறான மோசடி அழைப்புகள் வருவதால், வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என, பி.எஸ்.என்.எல்., தலைமை பொது மேலாளர், எஸ்.பி.சிங் தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...