அனைத்து சிறுவர் இல்லங்களையும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் இயங்கி வரும் அனைத்து சிறுவர் இல்லங்களையும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சமூக ஆர்வலர் ஏ. நாராயணன் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார்.  ஆதரவற்ற
சிறுவர்களுக்கான பாதுகாப்பு இல்லங்கள் என்ற பெயரில் இயங்கும் சில அமைப்புகளால் ஒரு மாநிலத்தில் இருந்து வேறு மாநிலங்களுக்கு குழந்தைகளைக் கடத்தும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. தமிழ்நாட்டில் பல சிறுவர் இல்லங்கள் உரிய அனுமதி பெறாமல் செயல்படுகின்றன. அத்தகைய இல்லங்களில் தங்கியுள்ள சிறுவர்கள் மிக மோசமாக நடத்தப்படுகின்றனர். சிறார் நீதிச் சட்டப்படி அத்தகைய இல்லங்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் சம்பந்தப்பட்ட அரசுத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் அத்தகைய ஆய்வுகள் எதுவும் நடப்பதில்லை.
ஒடிசா மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு சிறுவர்கள் பலர் கடத்தி வரப்பட்டு சட்ட விரோதமான முறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஆனால் அவ்வாறு ஒடிசாவிலிருந்து குழந்தைகளைக் கடத்தி வருவோரை அடையாளம் கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழகக் காவல் துறை எவ்வித முனைப்பும் காட்டுவதில்லை. ஆகவே, மாநிலங்களுக்கு இடையே குழந்தைகள் கடத்தப்படுவதைத் தடுத்திடவும், தமிழ்நாட்டில் ஆதரவற்றோர் இல்லங்கள் என்ற பெயரில் நடத்தப்படும் சிறுவர் இல்லங்களில் தங்கியிருக்கும் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாத்திடவும் அரசுக்கு நீதிமன்றம் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்று அந்த மனுவில் நாராயணன் கோரியுள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொறுப்பு) ஆர்.கே. அகர்வால், நீதிபதி என். பால் வசந்தகுமார் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநிலத்தில் உள்ள அனைத்து சிறுவர் இல்லங்களையும் ஆய்வு செய்யும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். சிறுவர் இல்லங்கள் உரிய அங்கீகாரம் பெற்றுள்ளனவா, ஒவ்வொரு சிறுவர் இல்லத்திலும் தங்கியுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை மற்றும் ஒவ்வொரு மாவட்ட வாரியாக எண்ணிக்கை மற்றும் அந்த சிறுவர்களின் மறுவாழ்வுக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த பல்வேறு விவரங்களைக் கொண்டதாக அந்த அறிக்கை இருக்க வேண்டும் என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...