சேம நல நிதி வட்டி விகிதம் மாறுகிறது


தமிழக அரசு சேம நலநிதி வட்டி விகிதம், ஏப்ரல் முதல் மாற்றியமைக்கப்படுகிறது.கடந்த, 2000ம் ஆண்டு, அக்., 1 முதல், "தமிழ்நாடு அரசு பணியாளர் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடை
திட்டம்-2000' செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, முந்தைய திட்டமான, "அரசு பணியாளர் சேம நலநிதி மற்றும் பணிக்கொடை திட்டம்-1984'ன் படி, ஏற்கனவே சந்தா தொகை செலுத்திவர்களுக்கு, விருப்பத்தின்படி மாதம், 50 ரூபாயும், 2000ம் ஆண்டு அக்., 1ம் தேதிக்கு பின், பணியில் சேருவோருக்கு மாதம், 70 ரூபாயும், சந்தாத் தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது.இத்திட்டத்தில், ஆண்டுக்கு, 11 சதவீத அடிப்படையில், வட்டி கணக்கிடப்பட்டு, முதிர்வுத் தொகை வழங்கப்படும். தற்போது, சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடை திட்டத்தில், வட்டி கணக்கிடும் முறையில் மாற்றம் ஏற்படுத்தி, அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, நிதித்துறை (ஓய்வூதியம்) அரசு முதன்மை செயலர் சண்முகம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு, அரசுப் பணியாளர் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடை திட்டம்-2000 கீழ் வழங்கப்படும் வட்டித்தொகை, வரும், 31ம் தேதி வரை மட்டுமே, 11 சதவீத வட்டி அடிப்படையில் கணக்கிடப்படும்.ஏப்ரல் முதல் தேதிக்குப் பின், அவ்வப்போது, பொது வருங்கால வைப்பு நிதிக்கு, அரசால் வழங்கப்படும் வட்டி விகிதத்தின் அடிப்படையில், கணக்கிட்டு வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் உள்ள, இதர நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளில் மாற்றம் ஏதுமில்லை.இவ்வாறு, அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...