வெண்புள்ளிகள் உள்ள மாணவ, மாணவிகளை பாரபட்சம் காட்டும் சில கல்வி நிறுவனங்கள் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்-தமிழக அரசு அவசர உத்தரவு


பள்ளி கல்லூரிகளில் பயிலும் சில மாணவ மாணவிகளுக்கு கை, கால், முகம் போன்ற இடங்களில் வெண்புள்ளிகள் காணப்படுகின்றன. இவர்களை வெண்குஷ்டம் என்று சக மாணவ, மாணவிகள் ஏளனம் செய்தனர். இதையடுத்து கடந்த 27.10.2010 ல் தமிழக அரசு அவசர உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.
அதில் “லூக்கோர்டெர் மா“ மற்றும் “விட்டிலைகோ“ என்று பிற மொழிகளில் அழைக்கப்படும் வெண்புள்ளிகளை வெண் குஷ்டம் என்று சிலர் தவறாக அழை க்கின்றனர். பாடப்புத்தகங்களிலும் வெண்குஷ்டம் என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் லூக்கோர்டமா என்றழைக்கப்படும் வெண்புள்ளிகள், நோய் அல்ல. அது பிறருக்குதொற்றாது. தொ ழு நோய்க்கும் வெண்புள் ளிக் கும் தொடர்பு இல்லை. என வே லூக்கோர்டெர்மாவை வெண்புள்ளி என்றுதான் அழைக்கவேண் டும். எழுத வேண்டும் என்று சுகாதாரத்துறை செய லா ளர் அரசுக்கு பரிந்துரைத் தார்.
இந்த பரிந்துரையை ஏற்ற தமிழக அரசு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பாதிக்கப்பட்டோர் மனக்குறை நீங்கவும், மருத்துவ துறையினர் சரியான சொற்றொடரை பயன்படுத்தவும், லூக்கோர்டெர்மா என்று அழைக்கப்படுவதை வெண்புள்ளிகள் என்றுதான் அழைக்க வேண்டும்.இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இது குறித்த விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படவில்லை. இந்நிலையில் கல்வி நிறுவனங்களில் வெண்புள்ளிகள் உள்ள மாணவ மாணவிகளை பாரபட்சமாக நடத்துவதாக கல்வித்துறைக்கு தகவல் தெரியவந்தது. இதையடுத்து பா ரபட்சமாக மாணவ மாணவிகளை நடத்தும் கல்வி நிறு வனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து பள்ளிக்கல்வித்துறை செய லாளர் சபீதா கூறியதாவது:
வெண்புள்ளிகள் உள்ள மாணவ, மாணவிகளை சில கல்வி நிறுவனங்கள் பாராபட்சமாக நடத்துவதாகவும், அட்மிஷன் அளிக்கப்படுவதில்லை என்றும் புகார்கள் பெறப்பட்டுள்ளன. அவ்வாறு பாரபட்சம் காட்டும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அவசர உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...