ஆசிரியர் கல்வி தேர்வு மதிப்பெண் சான்றிதழ் வினியோகம்

ஆசிரியர் கல்வி தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழ், வரும், 30ம் தேதி வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு, ஜூனில், ஆசிரியர் கல்வி தேர்வு எழுதியவர்கள், அந்தந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும், முதலாம் மற்றும் இரண்டாம்

ஆண்டு, தேர்வு எழுதிய, தனித்தேர்வர்கள், தாங்கள் தேர்வெழுதிய மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திலும், தங்கள் தேர்வு மதிப்பெண் சான்றிதழை வரும், 30ம் தேதி, பெற்றுக் கொள்ளலாம். மறுகூட்டலுக்கான விண்ணப்பங்கள், அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில், அடுத்த மாதம், 3ம் தேதி முதல் வழங்கப்படும். விண்ணப்பங்களை, அடுத்த மாதம், 5ம் தேதிக்குள், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், நேரில் சமர்பிக்க வேண்டும். தகுதியுடையோர், பட்டயச் சான்றிதழை பெற, அடுத்த மாதம், 4ம் தேதிக்குள், இந்த அலுவலகங்களை, நேரிலோ, தபால் மூலமோ தொடர்பு கொள்ளலாம். அரசுத் தேர்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...