இன்று - உலக சிட்டுக்குருவிகள் தினம்!


மறைந்து வரும் சிட்டுக் குருவியிகளை காப்பாற்ற உலக வீட்டு சிட்டுக்குருவி தினமாக 20-03-2013 (இன்று) அறிவித்து உலகம் முழுவதும் கொண்டாடவுள்ளனர்.

எண்பதுகளின் பிற்பகுதியில் புதிதாக வீடுகட்டி வந்த போது சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு வீடுகள் இல்லை. எங்கள் வீடு மட்டுமே. காலை, மாலை நேரங்களில் நூற்றுக்கும் அதிகமான சிட்டுக்குருவிகள் இனிய சத்தத்துடன் வீட்டை சுற்றியிருக்கும். எங்கள் அம்மாவும் அவைகளுக்கென சில தானியங்களை வாங்கி போடுவார்கள். மனிதர்களுடன் ஒன்றி வாழும் அவைகளில் சில பயமின்றி வீட்டிற்குள் வந்து நிலைக் கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்த்து அதனுடன் மோதிக்கொண்டிருக்கும். ஆனால் இப்போது அவைகள் இப்பகுதியில் இல்லை என்பதே உண்மை. இயற்கையின் அருளால் வேறு சுமார் 10 பறவையினங்கள் அதிகாலை முதல் மாலை வரை அதனதன் நேரத்திற்கு வந்து செல்கின்றன. ஆனாலும் சிட்டுக் குருவிகள் இல்லாதது மாபெரும் குறையே.


1. இரசாயான மருந்துகள் தெளிப்பு. ( நஞ்சு உணவு)
2. ஓட்டு வீடுகள் மாறி மாடிவீடுகள். ( கூடு கட்டுவதற்கு வசதியின்மை )
3. செல்போன் டவர்களின் கதிரியக்கம் ( முட்டைகள் பொறிப்பதில் சிக்கல்.)
4. வாகன இரைச்சல் ( அமைதியற்ற சுழல்.)

என காரணங்கள் கூறுகிறார்கள். ஆரோக்கியமான சுற்றுச் சுழல் ?????

நமது கண்களுக்கு மண்ணில் மண்புழுவும், மண்ணிற்கு மேல் மரங்களும், நீர் நிலைகளில் மீன்களும், ஆகாயத்தில் பறவைக் கூட்டங்களும் ஒரு பகுதியில் இருந்தால் அப்பகுதி ஆரோக்கியமாக உள்ளது என்பது இயற்கையின் பொது நியதி.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...