தேர்வுப் பணிகளில் அதிகாரிகள் : நிர்வாகப் பணிகள் ஸ்தம்பித்தன


கல்வித் துறை அதிகாரிகள், தொடர்ந்து தேர்வு கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதால், நிர்வாகப் பணிகள் ஸ்தம்பித்துள்ளன. பார்வையாளர்களும், அதிகாரிகளை சந்திக்க முடியாமல், ஏமாற்றம்
அடைந்து வருகின்றனர். பிளஸ் 2 தேர்வுகள், கடந்த 1ம் தேதியில் இருந்து, 27ம் தேதி வரை, 11 நாட்கள் நடந்தன. கல்வித் துறை இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் அனைவரும், தேர்வு கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். வழக்கமாக, பிளஸ் 2 தேர்வுகளில், இணை இயக்குனர்கள் மட்டுமே, கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவர். ஆனால், இந்த முறை, இயக்குனர்களும், அந்தப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பிளஸ் 2 தேர்வைத் தொடர்ந்து, 27ம் தேதியில் இருந்து, 10ம் வகுப்பு தேர்வுகள் நடந்து வருகின்றன. இத்தேர்வுகள், ஏப்ரல், 12ம் தேதி வரை, மொத்தம் ஏழு நாட்கள் நடக்கின்றன. 10ம் வகுப்பு தேர்வை கண்காணிக்கும் பணிகளில், இணை இயக்குனர்கள் மட்டும், தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால், இணை இயக்குனர்களின், நிர்வாகப் பணிகள் தேங்கி உள்ளன.
மேலும், அதிகாரிகளை சந்திக்க வரும் பார்வையாளர்களும், தினமும் ஏமாற்றம் அடைந்து செல்கின்றனர். இது குறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தேர்வுப் பணிகளை கண்காணிக்க, பறக்கும் படை குழுக்கள், ஏராளமானவை உள்ளன.
பிளஸ் 2 தேர்வின் அடிப்படையில், பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளுக்கான சேர்க்கை நடக்கின்றன; அதனால், அத்தேர்வில், கண்காணிப்பை தீவிரப்படுத்த, நடவடிக்கை எடுப்பது நியாயமானதே. ஆனால், 10ம் வகுப்பு மாணவர்கள், மிகவும் சிறிய மாணவர்கள். ஏற்கனவே பல பறக்கும் படைகள், தேர்வு அறைகளில், ஏறி இறங்குவதால், மாணவர்கள் பயப்படுகின்றனர். இந்நிலையில், இணை இயக்குனர்களையும், 10ம் வகுப்பு மாணவர்களை கண்காணிக்கும் பணிகளில் ஈடுபடுத்துவது, தேவையற்றது. தொடர்ந்து, தேர்வுப் பணிகளில் ஈடுபடுவதால், நிர்வாகப் பணிகள் தேங்கி உள்ளன. ஏப்ரல், 12ம் தேதி வரை, வேறு எந்தப் பணிகளிலும் கவனம் செலுத்த முடியாத நிலை உள்ளது.
இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...